பக்கம்:வானொலியிலே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தகுதியும் திறமையும்

11

படும் ? படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்கள் சிலரைவிட, பழக்கமுள்ள கம்பவுண்டர்களிற் சிலர் திறமையுடையவர் களாயிருப்பது ஏன் ? படித்துப் பட்டம் பெற்ற இஞ்சினி யர்கள் சிலரைவிட, பழக்கமுள்ள ஓவர்சியர்களிற் சிலர் திறமையுடையவர்களாயிருப்பது எப்படி? இதிலிருந்து படிப்பின் திறமைக்கும், தொழிலின் திறமைக்கும் வேறு பாடுகள் இருக்கின்றன என்பது நன்கு விளங்கும். அவ்விதமிருக்க தொழிற் கல்வி கற்பிப்பதற்குப் படிப்பின் மார்க்குகள் முதல் தேவை என்பது எவ்வளவு பெரிய தவறு ? அதை நம்மால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும் ?

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது மாகாணத்தில் டாக்டர் வேலைக்குப் படிக்கும் பிள்ளைகள் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டுமென்று ஒரு சட்டம் செய்ய திருத் தங்கள் கொண்டு வந்தார்கள். இதனால் சமஸ்கிருதம் தெரிந்த வகுப்பினரே டாக்டர் வேலைக்குத் திறமையுடைய வர்களாகச் சேர்க்கவும், சமஸ்கிருதம் தெரியாத-படிக்காத அதில் அதிக மார்க்குகள் வாங்க முடியாத பிற வகுப்பினர்களெல்லாம் டாக்டர் வேலைக்குப் படிக்க முடியாமற் போகவும் நேரிடும் என பனகால் அரசர் முதன் மந்திரியாக இருந்த காலத்தில் பொதுமக்கள் கிளர்ச்சி செய்தார்கள். டாக்டர் வேலைக்கும் சமஸ்கிருதப் படிப்புக்கும் என்ன சம்பந்தம் எனப்பல மேடைகளிற் பேசப்பட்டு எதிர்ப்புகள் கிளம்பின. பிறகு அது சட்டமாக்காமல் கைவிடப் பட்டது. திருப்பதி சமஸ்கிருதக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்கள் வியாகரணம் படிக்கத் திறமையற்றவர்கள் எனக் கருதி சேர்க்கப்படுவதில்லை.. பிறகு பனகால் அரசர் காலத்தில் அது திருத்தப்பட்டு இப்போது எல்லா வகுப்பு மாணவர்களும் வியாகரனை வகுப்பில் சேர்க்கப்பட்டு படித்துத் திறமையானவர்களாக வெளிவருகின்றனர். அறிவுத்திறமை என்னாயிற்று?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/12&oldid=487095" இலிருந்து மீள்விக்கப்பட்டது