பக்கம்:வானொலியிலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதி முறை 27

களின் வாழ்க்கை முறையை ஜாதி முறை வேடிக்கை பார்த்து வருகிறது.

ஜாதி முறை நல்லதா ? கெட்டதா ? என்பதும் ஒரு கேள்விதான். இதற்குப் பதில் கூறுமுன், எதற்கு ? என்று கேட்டுத்தான் பதிற்கூற வேண்டும். ஜாதி முறை சில ஜாதிகளுக்கு நன்மையாகத் தோன்றலாம். அதுவும் கானல் நீர்தான். சில ஜாதிகளுக்கு ஜாதி முறை தீமை தருகிறது. சுயநலத்தைக் கருதாமல் காட்டின் பொது நலத்தைக் கருதும்பொழுது ஜாதி முறை தீமைதரும் என்றே கூறி யாகவேண்டும். -

சமூக ஒற்றுமையின் மீதுதான் இக்காட்டில் ஒரு வலுவான அரசியலே அமைக்க முடியும். பிளவுபட்ட மக்களால் ஒரு கல்ல அரசியலே அமைக்க முடியாது. இவ் வுண்மையை உண்ர்ந்த அரசியல் நிபுணர்கள், சமூக சீர்திருத்தத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், அறிஞர்கள் ஆகிய அனைவரும் 5ம் காட்டின் எதிர்கால கலனைக் கருதி சமூக ஒற்றுமைக்கு ' ஜாதி முறை" அழிய வேண்டும் என்றே கூறி வருகிருர்கள்.

" ஜாதி இரண்டொழிய வேறில்லே.” அது, ' இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் ' என்பதுதான் என்றும், ஒழுக்கமுள்ளோர் அனைவரும் ஒன்றே என்ற பொருளில், ஒன்றே குலமும் " என்றும், எல்லாம் எனது ஊர், எல்லோரும் எனது சுற்றத்தார் என்ற பொருளில், " யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்றும் பழந்தமிழ் நூல்களில் அரும் புலவர்கள் பலர் ஜாதி முறையை வெறுத்துக் கூறியிருக்கின்றனர். . . . . -

அது மட்டுமா ? வேதாந்தக் கருத்தை விளக்கிய விவேகானந்த சுவாமிகளும், சித்தாந்தக் கருத்தை விளக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/28&oldid=646769" இலிருந்து மீள்விக்கப்பட்டது