பக்கம்:வானொலியிலே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரம் 55

தேவைகளே நிரப்பி வைத்தது 4. பொருள்களே உள்காட்டிற் குள்ளேயே மாற்றிப் பொருளாதாரத்தைச் சரிப்படுத்திக் கொண்டது 5. அரசாங்கம் அமைதியாக நடைபெற துணை செய்தது 6. நாட்டு கலன் பாதுகாக்கப்பெற்றது ?. ஆகியவைகளாம். இவை யாவும் வியாபார நன்மைகள்.

இந்த நன்மைகளைச் செய்வதற்காக அந்த வியாபாரி ஒரு சிறிது இலாபம் அடைவது நியாயம் ஆகும். அவ்வாறு இலாபம் அடைய அவருக்கு உரிமையும் உண்டு. என்ருலும், இந்த இலாபம் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். வரம்பு கடவாத இலாபத்திற்குதான் இலாபம் என்று பெயர். வரம்புகடந்து விட்டால் அதற்கு இலாபம் என்று பெயர் அல்ல. கொள்ளே என்று ஆகிவிடுகிறது. இலாபம் வரம்பு கடந்து, கொள்ளேயாக மாறும்பொழுது, வியாபாரியும் வரம்பு கடந்து கொள்ளைக்காரகை மாறி விடுகிருன்.

தேவையில்லாதபோது சரக்குகளைச் சேகரித்துத் தேவைப்படுகிறபோது செலவு செய்வதால் காட்டிற்கு நன்மை ஏற்படுகிறது. ஆனால் தேவைப்படுகிறபோது பொது ஜனங்களுக்கு கிடைக்கவிடாமல் சேகரித்து வைப்பதால் நாட்டிற்குத் திமை ஏற்படுகிறது. சரக்குகளே மறைத்து வைப்பது மோசம். மக்களே ஏமாற்றுவது வஞ்சகம். மறைவாக விற்பது இருட்டு விற்பனே. கணக்கு எழுதாது விற்பது திருட்டு விற்பன. வியாபாரியும் கொள்ளைக் காரளுகி, வியாபார ஸ்தலமும் வழிப்பறி இடமாக மாறி விட்டால் காட்டிற்கு ஏற்படும் இமைகளைச் சொல்லவா வேண்டும் ? - -

இப்படிப்பட்ட ஒரு வியாபாரி காட்டிற்கும், மக்க ளுக்கும். அரசாங்கத்திற்கும் கேடு செய்வதோடு கில்லாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/56&oldid=646829" இலிருந்து மீள்விக்கப்பட்டது