பக்கம்:வானொலி வழியே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியமும் நாட்டு ஒருமைப்பாடும் யினும் காவியமாயினும் காவலாயினும் நாடகமாயினும்-இந்த இணைப்பு நிலையை வலியுறுத்தியே வருகிருர்கள் என்பது நாடு நன்கறியும். எனவே தமிழ் இலக்கியங்கள் தோன்றிய நாள் தொட்டு இரண்டாயிர மாண்டுகளுக்கு முன்பிருந்தே இன்று வரை இணைப்பையும் அதன் வழி உருவாகும் பண்பாடு, நாகரிக கலங்களையுமே வாழ வழி வகுக்கின்றன. இலக்கிய மரபில் மட்டுமன்றி மொழி மரபிலும் இந்த இணைப்பினைக் காண்கிருேம், மூவாயிரமாண்டுகளாக, இங். நாட்டில் வாழ்கின்ற மொழிகள் தம்முடன் கலந்து வாழ வழி: கண்டனர் அறிஞர். தொல்காப்பியத்தில் பிறமொழிகள். சிறப்பாக வடநாட்டு மொழி - வடமொழி - தமிழில் வழங்க வழி வகுக்கப்பெற்றுள்ளது. எனவே அக்காலம் மொழி' வேற்றுமை அறியாதது. வேங்கடத்துக்கு வடக்கு வேற்று மொழி விரவியது. தொல்காப்பியர் அவ்வேற்று மொழி' தமிழில் வழங்க வழி வகுத்துள்ளார். இத்தொல்காப்பியர் காட்டும் வழியில் மொழிக்கலப்பு அமையுமாயின் இந்த நாட்டில் மொழிச் சிக்கல் வளர இடமிருக்காது. பலர் இந்த அடிப்படையினை மறந்த காரணத்திலேதான் தேவையற்ற தொல்லைகள் உண்டாகின்றன. கிறித்து சகாப்தத் தொடக் கத்தில் தமிழ்நாட்டுப் புத்த சமண மதத்தவர் பல வடமொழி' இலக்கியங்களைத் தமிழ்மொழியில் தந்தனர். பிற்காலத்தில் இராமாயணம், பாரதம் போன்றவை வந்தன. அம்மொழி' பெயர்ப்புகள் இம்மொழி மரபு கெடாத வகையில் காட்டு: ஒருமைக்கு ஊறு நேரா வகையில் அமைந்தன. எனவே, அவை காலத்தை வென்று வாழும் இலக்கியங்களாகி இன்றும் வாழ்கின்றன. இவ்வாறு மொழித் துறையிலும்: அம்மொழி வழித் தோன்றிய இலக்கிய நெறியிலும் காணும். நாட்டு ஒருமைப்பாட்டு கிலே எண்ணி எண்ணி மதித்துப் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/17&oldid=900688" இலிருந்து மீள்விக்கப்பட்டது