பக்கம்:வானொலி வழியே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் கண்ட தமிழகம்-பாலை. 18-9-1971 தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள். எனவே அவர்தம் வாழ்வு திணைகலங்களோடும் அவ்வத். திணைகளுக்கு ஏற்ற ஒழுக்க நெறியோடும் அமைந்து கின்றது. உலகில் வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதுதான் பொரு. ளதிகாரம் பெற்ற மை. இப் பொருளதிகாரமே பண்டைத் தமிழர் வாழ்வையும் அதன்வழி அக்காலத்திய தமிழகத்தையும் நமக்கு விளக்குகின்றது. தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இப்பொருளியலைப் பற்றிப் பல அறிஞர்கள் எழுதியிருக்கிருர்கள் எனத் தொல்காப்பியத்தின் வழியே நமக்குத் தெரிகின்றது. என்ருலும் அவர்தம் நூல்களைப்பற்றி யெல்லாம் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே பொருளியல் அடிப்படையில் அன்றைய தமிழ கத்தை நம் கண்முன் காட்டுவது தொல்காப்பியமேயாம், அவ்வாறு காட்டும் பொருளின் பிரிவுகளாகிய அகம், புறம் என்னும் இரண்டிலும் இன்பத்தை எல்லா உயிர்க்கும். பொது எனவே காட்டி, அவற்றுள் மனிதன் பெறும் இன்பமே ஈண்டுப் பேசப்பெறுவது என்பர் அவர். 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/19&oldid=900692" இலிருந்து மீள்விக்கப்பட்டது