பக்கம்:வானொலி வழியே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே இத்தொல்காப்பியர் காட்டும் நால்வகைத் திணை கிலங்கள் பற்றியும் அவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் அவற்றின் வழியே சிறந்திருந்த தமிழகம் பற்றியும் அறிஞர் பலர் காட்டக் கண்ட உங்கள் முன் அடிப்படை நில மில்லாப்-பாலே நிலப் பண்பையும் ஒழுகலாற்றையும் உணர்த்தவே நான் நிற்கிறேன். பாலே தனியாகச் சொல்லப்படாவிடினும் அங்கிலத்தின் இயல்பு பற்றியும் அங்கில அடிப்படையான ஒழுக்க நெறி பற்றியும் தொல்காப்பியர் நன்கு விளக்கிக் காட்டுகிருர். தொல் காப்பியர் வழியே பாலைப் பண்பைக் கண்டு, அன்றைய தமிழகத்தை உணரலா மல்லவா? பிற்காலத்தவர் அதனைப் பாலே என்ருராயினும் தொல் காப்பியர் அதன் சிறப்பு நோக்கி நடுநிலைத் திணை என்று கூறுவர். இதற்கு விளக்கங் காட்ட வந்த நச்சினர்க்கினியர், 'நடுவணதாகிய நண்பகற் காலம் தனக்குக் காலமாதலாலும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு வைத்தலானும் உலகியற் பொருளான அறம் பொருள் இன்பங்களுள் நடுவணதாகிய பொருட்குத் தான் காரணமாகலானும், நடுவணதெனக் குணம் காரணமாயிற்று' என்று பாலையின் சிறப்பை விளக்கிக் காட்டுவர். பின் வந்த இலக்கியங்களிலும் .பிறவற்றைவிடப் பாலேயே சிறப்பாகப் பேசப்பெறுகின்றது. அகநானூறு தன் 400 பாடல்களுள் சரி பாதியான 200 பாட ல் க ளே ப் பாலைக்கு உரித்தாக்குகின்றது. பின் வந்த இளங்கோவடிகள், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து கல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/20&oldid=900693" இலிருந்து மீள்விக்கப்பட்டது