பக்கம்:வானொலி வழியே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே தலைவியை விட்டுப் பிரிதலும் தலைவன் தலைவியை உடன் போக்கில் அழைத்துச் சென்று பிறரைவிட்டுப் பிரிதலு மாகப் பாலே எண்ணப்படுகின்றது. இவற்றின் அடிப்படை யிலேயே தொல்காப்பியரும் அவர் அடி ஒன்றிய இலக்கியம் திட்டிய பெருமக்களும் அக்காலத்திய தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் நல்லியல்பைக் காட்டுகின்றனர். அகப்பொருள் இலக்கணத்திலேயே பிரிவைப் பற்றிய பாடல்களே அதிகம் உள்ளன எனக் கண்டோம். அவற்றுளெல்லாம் தலைவன் தலைவியை விட்டுப் பிரியின் நிகழும் பல்வேறு நிகழ்ச்சிகளும் மாறுபாடுகளும் பிறவும் சுட்டிக் காட்டப் பெறுகின்றன. களவிலாயினும் சரி கற்பிலாயினும் சரி தலைவன் தலைவியை விட்டுப் பிரியக் கடமைப் பட்டவனகின்ருன். இந்த அடிப்படை கொண்டு. காணின் தொல்காப்பியர் காலத்து மகளிர் சிறந்த அறிவும். திருவும் பெற்றவர்களாக இருந்தனர் என்பதும், எனினும் பொருளிட்டவோ வேறு வினையாற்றவோ கணவரை விட்டு வெளியே செல்லவில்லை என்பதும் நன்கு புலனுகின்றன. மேலும் கணவரது பிரிவின் கண்ணும் பெண்டிர் தங்களுக்கே உரிய இயல்பான பண்பாட்டின் அடிப் படையில் கண்டவற்றையும் பேச மாட்டார்கள் என்பதும் அவர்தம் உள்ள உணர்வால் புற உறுப்புக்கள் நிலைமாறித். தம் உள்ளத்தைப் பளிங்கெனக் காட்ட நேரினும் மறைக்க முயல்வர் என்பதும் தெளிவாகின்றன. களவுப் புணர்ச்சியில் அத்தகைய நிலையினை அறியும் தோழியின் கூற்றில் இங்கிலே காணப்பெறினும் தலைவி, " காமத் திணையிற் கண்ணின்று வருஉம் நானும் மடனும் பெண்மைய வாதலின் குறிப்பினும் இடத்திலும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அளவயி னை' (களவு-108) 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/22&oldid=900697" இலிருந்து மீள்விக்கப்பட்டது