பக்கம்:வானொலி வழியே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே எனத் தோழி கூற்ருகத் தெள்ளத் தெளியக் காட்டுகின்ருர். எனவே தமிழர் வாழ்வு இருவரும் இணைந்த வாழ்வே என் பதும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாப் பெரு நெறி கற்பு நெறி என்பதும், அவ்வாழ்விற்கு இன்றியமை யாப் பொருள் தேடும் பொறுப்பு கணவனைச் சார்ந்தது என் பதும், அதற்கு அவன் பிரியுங்கால் தலைவி வாடுவாள் என் பதும், எனினும் அவன் கடமை வழியே பிரிந்து சென்று, செயலாற்றிப் பொருள் கொணர்ந்து, காதலியோடு கலந்து இன்புறுவன் என்பதும் தொல்காப்பியர் காட்டுவனவாம். நடுவுநிலைத் திணை எனப் பாலையைத் தொல்காப்பியர் கூறியதற்கு நச்சினர்க்கினியர் 'அறம், பொருள், இன்பங் களுள் நடுவணதன் பொருட்டுத் தான் காரணமாகலானும் என்று காட்டி, இப்பிரிவு பல வகையில் அமையினும் பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை யாதலால் பொருட் பிரிவே பெரிதும் வேண்டப்பட்டது என விளக்கி அப் பொருள் பிரிவு மட்டுமன்றிக் கடமைவழிச் செயலாற்றப் பிரியும் வேறு சில பிரிவுகளையும் சொல்லித் தொல்காப்பியர் காட்டிய அக்காலத்திய ஆடவர்தம் கடமை நெறியினையும் செயல் திறனையும் சுட்டி விளக்குகிரு.ர். இனி, இப் பாலையாகிய பிரிவு உள்ள உணர்வுக்கு உணவூட்டுவது என்பதையும் தொல்காப்பியர் நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும் (அகத்தினை - 43) என்று சுட்டு வர். ஒரு சேரப் பிரியாது வாழ்தல் சிறப்புத்தான் எனினும் பிரியின் அவ்வாழ்வு இன்னும் சிறப்படைகின்றது என இதல்ை உணர முடிகிறதன்ருே? உள்ளக் களித்தலாகிய உயரிய இன்பம் இப்பிரிந்தார் மாட்டு உண்டாவது சிறப் புடைத்து. மேலும் தொல்காப்பியர் இக்கருத்தை நிகழ்ந்தது கூறி கினேயலும் திணையே (44) என்று அடுத்த 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/24&oldid=900701" இலிருந்து மீள்விக்கப்பட்டது