பக்கம்:வானொலி வழியே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் கண்ட தமிழகம் - பாலே குத்திரத்தால் நினைப்பதோடன்றிச் சொல்லியும் மகிழ்கிலே காட்டுவர். எனவே கூடிய இருவர் உடலால் சேராரா யினும் உள்ளத்தால் ஒன்றியவராகத் தாம் பெற்ற இன் பத்தை எண்ணியும் பேசியும் வாழும் அன்றைய தமிழ்ப் பண்பாட்டிற்கு இதனினும் வேறு சான்றும் வேண்டுகொல்? பிரிவால் உண்டாகும் ஆற்ருமைக்கிடையே பெறும் இப் பேரின்பம் வாழ்வை வளர்ப்ப தன்ருே? இனி, இப்பிரிவில் உடன்போக்கையும் உள்ளடக்குவர் தொல்காப்பியர். தாயினும் நாணினும் சிறந்த கற்பே' கிலைக்களகை உடைய தலைவி, தானே அவ்வுடன் போக்கினை விரும்பினும் கூறினும் தவறில்லை என்பார், ' உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர் காட்சி கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே " (களவியல் 113) என்று காட்டித் தலைவி தலைவன் உள்வழிப் படுதலையும், அவள் தாவில் நன்மொழி சொல்லுதலேயும் சிறப்பிக்கின்ருர். இதே கருத்தினைப் பொருளியல் 21 ஆம் குத்திரத்தானும் நன்கு விளக்குகிருர் தொல்காப்பியர். இப்பிரிவு சமுதாயத்தால் சிறந்ததாகப் போற்றப் பட்டது என்பதைக் கலித்தொகையின் 9 ஆவது பாலேக்கவி நன்கு விளக்குகின்றது. 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/25&oldid=900703" இலிருந்து மீள்விக்கப்பட்டது