பக்கம்:வானொலி வழியே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே " இறந்த கற்பினுட்டு ബ്ഖ படரன்மின் சிறந்தான வழிபடிஇச் சென்றனள் அறந்தலைப் பிரியா ஆறுமற் றதுவே" என்று காட்டி அந்தப் பிரிவாகிய உடன்போக்கு அறவழி யாலானது என வற்புறுத்துகின்ருர் பெருங்கடுங்கோ. பிரிவு களவு, கற்பு என்ற சரிடத்தில் நிகழினும் ஓதல், பகை, தூது போன்ற பிரிவுகள் களவிடை நிகழலாகா தெனத் தொல்காப்பியர் களவியலின் இறுதிச் சூத்திரத்தால் க்ாட்டி, அவை கற்பிற்கே உரியன என விளக்கிச் சிறு காலப் பிரிவாகிய இரு திங்கள் எல்லே கடவாதனவற்றையே களவுக்கு உரிமையாக்குகிருர், விரைவில் தலைவன் தலே வியை மணக்க வேண்டும் என்ற முறையில்ை. கற்பிடைப் பிரியும் பிரிவினுக்கும் பல கட்டுப்பாடுகளை வகுத்து, வளரும் சமுதாய வாழ்வின் அடிப்படையாகிய இல்லற நெறியையும் தொல்காப்பியர் வற்புறுத்துகிருர். பூப்பெய்திய காலத்தை ஒட்டிய 12 நாட்களும் கரு வயிற் றுண்டாம் காலமாதலால் அக்காலத்தில் தலைவன் பிரிய லாகாது என்பதனையும் வ ற் பு று த் தி, இல்லற நெறி அக்காலத்தில் போற்றப்பட்ட சிறப்பினே அவர் காட்டுகின்ருர். அப்படியே பிற பிரிவுக் காலங்களிலும் செல்லுமிடத்தில் எல்லாம் தலைவன் தன் கடமை உணர்வை மறந்து, காதல் உணர்வால் உந்தப்பட்டுத் தலைவியை நினைத் துப் புலம்பலோ பேசலோ கூடாதெனக் காட்டி வினையே ஆடவர்க்கு உயிர்' என்ற சிறப்பை உணர்த்துகிருர். ஆனல் அதே வேளையில் இல்லுறை தலைவி தலைவனை எண்ணி, அவன் அளித்த இன்பத்தையும் தண்ணளியையும் நினைத்து கினைத்து நெடிது கிற்க வேண்டிய மரபையும் கணவர் 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/26&oldid=900705" இலிருந்து மீள்விக்கப்பட்டது