பக்கம்:வானொலி வழியே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் கண்ட தமிழகம் - பாலை வாழ்வே தம் வாழ்வாகக் கொள்ளும் பண்பினையும் உணர்த்துகிரு.ர். இப்போக்காகிய பாலேயின் எல்லேயில் பிரிந்த இருவரும் இணைந்து கூடியும் ஊடியும் மகிழ்ந்து தாம். இன்பம் பெறுவதோடு, உலகை ஒத்து நோக்கி அறம், பொருள், இன்ப மன்றி இங்கும் அங்கும் வேறு வாழ்வு இன் மையான், அவ்வாழ்வே உலகச் சமுதாய வாழ்வாக அமைய வேண்டும் என்பதையும் விளக்கித் தனி மனித வாழ்வில் முகிழ்க்கும் சமுதாய வாழ்வைச் சுட்டும் தொல்காப்பியர் நெறி செம்மையானதாகும். வையம் அவர் காட்டிய தெய்வ நெறி பற்றி வாழின் உய்தி உண்டு-உயர்வு உண்டு. உயிர் தழைத்து நலம் பெருக வாய்ப்பும் உண்டு. 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/27&oldid=900707" இலிருந்து மீள்விக்கப்பட்டது