பக்கம்:வானொலி வழியே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் (21-1-63) மொழியும் அம்மொழிவழித் தோன்றிய இலக்கியங் களும் மக்கட் சமுதாயத்தை மங்காது வாழவைப்பனவாம். மக்கள் வாழ்வொடு பொருந்திய இலக்கியங்களே கால மெனும் கடுவெள்ளத்துக்கு எதிராக நீச்சலிட்டு நெடுங் காலம் வாழ்கின்றன. அத்தகைய இலக்கியங்கள் கம் தமிழ் மொழியில் உள்ளமையும் அறிவோம். புலவர்கள் ஏட்டில் வடித்து எல்லேயிட்டு எழுதி வைத்தவற்றை மட்டுமே இலக்கியம் எனப்பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும் சற்று கின்று நினைத்துப் பார்த்தால், எழுதிய இலக்கியங்களைக் காட்டிலும் எழுதாத இலக்கியங்களே எல்லையற்றன என்பது புலகுைம், அவ் விலக்கியங்களே - எழுதாத இலக்கியங்களே - எட்டில் எழுதி காட்டுக்குக் காட்ட நல்ல முயற்சிகள் இன்று நடைபெறு. கின்றன. இங்கிலே மகிழ வேண்டிய ஒன்று. மனிதன் தான் பேசும் மொழி செம்மை பெறுவதன் முன் ஒருசில பேசியும் பாடியும் வந்திருப்டான். ஆனல் அவற்றை அறிந்தோர் வாய்மொழி இலக்கியம் எனக் கொள்ள மாட்டார்கள். மரபும் அதுவன்று. செம்மை நலம் பெருத திருந்தா நிலையில் தோன்றும் எதுவும் இலக்கிய 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/28&oldid=900709" இலிருந்து மீள்விக்கப்பட்டது