பக்கம்:வானொலி வழியே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் மாகாது. மனிதன் தன் உள்ளத்தைப் பரிமாறிக்கொள்ளும் மொழியில் வல்லவனகி, அம்மொழியில் பல்வேறு இலக்கியங் களே உண்டாக்கும் காலத்திலேயே இலக்கியங்கள் உண்டாக வாய்ப்பிருக்கும். அதற்கு முன் தோன்றியவை யெல்லாம் அம்மொழி, இலக்கிய வளர்ச்சிகளாகிய மாளிகைகளுக்கு அடித்தளமாகத் தரைக்குள் மறைக்கப்படுமேயன்றிப் புறத் தில் நன்கு விளங்காது. அன்றி விளங்கிலுைம் கட்டிட அடித்தளம் அழகுற அமையாதது போன்றே செம்மை கலம் சாராதவையாக இருக்கும். எனவே இங்கு நாம் வாய் மொழி இலக்கியமாகக் கொள்வது மொழி செம்மை பெற்ற பின் காலத்தால் பிந்திய - எழுதும்;இலக்கியம் உருப்பெற்ற பின்பு தோன்றியவற்றையேயாம். இங்கிலே ஆங்கில மொழியில் நன்கு விளக்கம் பெற் றுள்ளது. வாய்மொழி இலக்கியம், நாடோடி இலக்கியம் என்று தமிழில் கூறப்பெறும் இவற்றை ஆங்கிலத்தில் "Ballad என்று சொல்லுவர். இவ்வகை இலக்கியம் அம் மொழியில் 17 அல்லது 18ஆம் நூற்ருண்டிலேதான் வளர்ந்தது என்பர். அதற்குமுன் இதன் நிலையையோ அமைப்பையோ அங்காட்டில் யாரும் எண்ணியிருக்க மாட் டார்கள் என நினைக்க வேண்டியுள்ளது. அதன் இலக்கண அமைதியைப் பலர் நன்கு ஆய்ந்து அறுதியிட்டுள்ளனர். அவற்றுள் சில இங்கே காட்டப் பெறுகின்றன. இந்த வாய்மொழி இலக்கியம் ஆசிரியர் பெயர் அறிய முடியாதது. எளிய நடையில் வாழ்வொடு பிணைத்த - இன்ப துன்ப நிகழ்ச்சிகள் தோய்ந்த வகையில் இவ்விலக்கியம் அமையும். பெரும்பாலும் இரண்டிரண் டிணைந்த குறள் அடிகளால் கேட்போர்க்கும் சொல்வோர்க்கும் எளிமையில் பொருள் விளங்கி, மனத்துக்குப் புலனுவது - மனத்தில் 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/29&oldid=900711" இலிருந்து மீள்விக்கப்பட்டது