பக்கம்:வானொலி வழியே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே நிலைத்து இடம் பெறுவது; பெருங்கலே நலம் எனப்பாராட்டு வன ஒன்றையும் அது பெருவிடினும், கலை உணர்வே இல்லாத ஒன்ருக அது அமைந்தது எனக் கூற முடியாது. தனிப்பட்டவரைப் பற்றியதாக இராமல் - பொதுலம் பொருந்தியதாக, எளிமையில் பாடக்கூடிய தாள இசை க்ளுக் கியைந்ததாக, உயர்ந்த பொருளையும் எளிய வகையில் விளங்க வைக்கத் தக்கதாக அமைவது பெரும்பாலும் இன்றைய நாகரிகமும் கல்வி முறையும் பரவாத கிராம மக்களிடையில் அதிகமாக வழக்கத்தில் இருப்பது வழிநடை செல்வோரும் வருந்தி உழைப்போரும் தம் நடையில் தளர்வும் உழைப்பில் சோர்வும் தோன்ருதிருக்கும் வகையில் கூடிக் கூடிப் பாடி மகிழும் பண்பு வாய்ந்தது. கிராம மக்களுக்குப் பழக்கமான கதைகளே இசையமைத்து, அவற்ருல் நல்ல நீதியை உலகுக்கு உணர்த்தும் வகையில் சிறப்பது பாடு பவரே அதன் உடையவராக, அவர் வழிய்ே - வாய் மொழிப் படியே மற்றவரிடம் பரவி உலகம் உள்ளளவும் தானும் இலக்கியமாக வாழ்ந்து வருவது; இது கேட்டு மகிழப் பயன் படுதுதன்றி பயின்று தெளிவதன்று. இத்தகைய வாய்மொழி இலக்கியம் தமிழில் மொழி வரலாறு வரையறுக்க முடியாத காலந்தொட்டே இருந்து வருகின்றது. தமிழ் நாட்டின் தொன்மையை விளக்குவது தொல்காப்பியமாகும். இத் தொல்காப்பியத்தின் காலத்தைஇடைச்சங்க காலத்தை - இன்றைக்கு மூவாயிரமாண்டு களுக்கு முற்பட்டதெனப் பலரும் கொண்டுள்ளனர். அக் காலத்தில் எழுதப்பெற்ற பல்வேறு சிறந்த இலக்கியங்கள் இருந்த காரணத்தாலேயே தொல்காப்பியம் போன்ற அத்தகைய பெரிய இலக்கண நூல் தோன்றிற்று. ஏட்டில் எழுதப்பெற்ற இலக்கியங்களோடு, இந்த வாய்மொழி 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/30&oldid=900715" இலிருந்து மீள்விக்கப்பட்டது