பக்கம்:வானொலி வழியே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் இலக்கியமும் நாட்டில் உலவிற்று என்பதைத் தொல் காப்பியரும், அவர் நூலுக்கு விளக்கத்தந்த உரையாசிரியர் களும் நன்கு விளக்கிக் காட்டியுள்ளார்கள். பொருளொடு புணராப் பொய்மொழி பொருளொடு புணர்ந்த நகை மொழி, பிசி, பண்ணத்தி, வாய்மொழி என்றெல்லாம் தொல்காப்பியம் இந்த இலக்கியத்தை எடுத்துக் காட்டு கின்றது. யாப்பின் வகைகளை வரையறுக்க கினைத்த தொல்காப்பியனர், அவற்றைத் தொகுக்கும்போது 'பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே (பொருள் 385) எனத் தொடர்ந்து காட்டிக்கொண்டே செல்கின்ருர். எனவே பாட்டினைப் போன்று வாய்மொழி இலக்கியத்துக்கும் ஒரு வரையறுத்த யாப்புமுறை இருக்க வேண்டும் என்பது கன்கு தெளிவாகிற தன்ருே வாய்மொழி இலக்கியம்’ என்றதும் எதையும் எப்படியும் சொல்லலாம் என எண்ணு தல் தவறு என உணர்த்தல் வேண்டும். தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் கூட 'Ballad' என வழங்கும் அவர்தம் வாய் மொழி இலக்கியத்துக்கு வரையறை செய்துள்ளனர். தொல் காப்பியர் காலத்திய வரையறை என்ன என்பது நமக்குத் திட்டமாகத் தெரியாவிடினும் ஆங்கில காட்டு வரையறை கன்கு அமைந்துள்ளது. இன்றைய தமிழ் நாட்டில் காணும் வாய்மொழி இலக்கியங்களுக்கும் அவை பெரிதும் பொருங் தியுள்ளன. புதுநாகரிக வாழ்வில் சிக்கிய காரணத்திலேயே பல்வேறு மாருட்டங்களும் போராட்டங்களும் உண்டா கின்றன போலும். அந்த பழம்பெருங்குடி மக்களின் உள்ள கிலே ஒரே வகையில் அமைவதால் போலும் அருந்தமிழ் காட்டிலும் ஐயாயிரம் கல் அப்பால் உள்ள ஆங்கில காட்டி 1. British popular Ballads p. 30 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/31&oldid=900717" இலிருந்து மீள்விக்கப்பட்டது