பக்கம்:வானொலி வழியே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே லும் வாழும் வாய்மொழி இலக்கியங்கள் ஒரே வகை அடிப் படையில் தளர் நடையிட்டுத் தழைத்தோங்குகின்றன. இவ் வாய்மொழி இலக்கியம் பற்றி அக்காலத்தில் வழங்கிய தொடர்களையும் பெயர்களையும் காணின் அது வாழ்வொடு எத்துணைத் தொடர்பு கொண்டுள்ளது என்பது நன்கு விளங்கும். 'பொய்மொழி கண்டிக்கத் தக்கதாயினும் அதுவே பொருளோடு புணராதாயின் இலக்கியமாகும்' நிலையை நன்கு அறிகின்ருேம். அப்படியே வேடிக்கைக் கதைகளும் விடுகதைகளும் (பிசி) பிற நாடோடிப்பாடல் களும் (பண்ணத்தி) அக்காலத்தில்-இன்றைக்கு இரண்டா யிரும் மூன்ருயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - தமிழ், காட்டில் வழக்கத்தில் இருந்தன என்பது தேற்றம். இத்தகைய வாய்மொழி இலக்கியம் இத்தனை நூற்ருண்டுகளிலும் எந்த நிலையில் இருந்தது? வளர்ந்ததா? வாழ்ந்ததா? தேய்ந்ததா? அன்றிச் சிதைந்ததா? தமிழ் நாட்டு வரலாறு வரையறுக்க முடியாத நிலையில் உள்ளமை, போன்றே இதன் வரலாறும் திட்டமாக வரையறுக்க முடியாத ஒன்ருக விட்டது. எனினும் கிடைக்கும். ஆதாரங்களைக்கொண்டு ஓரளவு முயலலாம் என எண்ணு: கின்றேன். தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகெங்கனும் வாழும் மக்கட் சமுதாயத்தின் வாழ்க்கைத் தொடர்புகளை யும் மாற்றங்களேயும் பிறவற்றையும் இவ் வாய்மொழி' இலக்கியம் காட்டவல்லது என்பது அறிஞர் கருத்து. எனவே இதன் வரலாறு நன்கு அறியமுடியாத ஒன்ருயினும் இது மனித இன வரலாற்றை அறியப் பெரிதும் பயன்படு கின்றது என்பது தேற்றம். இத்தகைய வாய்மொழி இலக்கியம் இடைக்காலத்தில் வளர்ச்சி அடையாது வீழ்ச்சி அடைவானேன்? இத்துறை 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/32&oldid=900719" இலிருந்து மீள்விக்கப்பட்டது