பக்கம்:வானொலி வழியே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் யில் கருத்திருந்திய அறிஞர் சிலர் மனிதன் இயற்கை வாழ்வை விட்டுச் செயற்கை வாழ்வை காடிய ஒன்றே இவ்விலக்கிய வீழ்ச்சிக்குக் காரணம் எனக் காட்டுவர். இயற்கைச் சூழலிலே இயற்கை நெறியிலே இத்ததைய "வாய்மொழி இலக்கியம் பாடி மகிழ்ந்திருக்க வேண்டும். இந்த நிலை இன்றும் நெடுந்தொலைவிலுள்ள கிராமங்களில் காண்கின்ருேம். மனிதன் தன் இயல்பான வாழ்வை விட்டு' இயந்திர வாழ்வை மேற்கொண்டு இயங்கத் தொடங்கிய நாட்களிலெல்லாம், அவன் செயற்கைச் சேற்றல் சிக்கிக் கொள்ளுகின்ருன். இன்றைய பல பெருநகரங்களில் இத்தகைய இயந்திர மனித வாழ்வைத்தான் காண முடிகின்றது. ஆகவே இயற்கையொடு பொருந்திய ஆடலும் பாடலும் அவனுக்கு அப்பாற்பட்டனவாயின. இத்தகைய கிலே தமிழ்நாட்டில் இரண்டொருமுறை நிகழ்ங். திருக்கவேண்டும். எத்தனையோ கிராமச் சூழலும் நானில இயற்கை வாழ்வும் நம்முன் காட்டப்பெறினும், கடைச்சங்கள் கால வஞ்சியும் காஞ்சியும். புகாரும் மதுரையும் அன்றைய மனிதன் இயந்திர வாழ்வை மேற்கொண்டதைக் காட்டு: கின்றனவே. எனவே அந்தந்த இயந்திர வாழ்வுக்கு இடை யிடையே இளங்கோவடிகள் இயற்கை வாழ்வு வாழ்ந்த பரதவர் - வேடுவர் - ஆயர் - குறவர் முதலியவர்களே நம்முன் கொண்டுவந்து நிறுத்தி, அவரவர்தம் வாய்மொழி: இலக்கியங்களே வண்ணப் பாடல்களாக நமக்கு வட்டிக் கிருர். அவர்தம் வரிப்பாடல்களும் குரவைப்பாடல்களும் கூடி ஆடிப்பாடும் வாய்மொழி இலக்கியங்களாக இருந்து,. அவராலேயே ஏட்டில் இடம் பெற்றவையாக வேண்டும். எனவே காட்டிலே வாய்மொழி இலக்கிய வழக்காறு மங்கு. கின்றது என்ருல் மனிதன் செயற்கையை நாடிச் செல்லு: கிருன் என்பது பொருள் போலும். 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/33&oldid=900721" இலிருந்து மீள்விக்கப்பட்டது