பக்கம்:வானொலி வழியே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே தொல்காப்பியர் காலத்துக்கும் கடைச் சங்கத்துககும். இடைப்பட்ட காலத்திய நாட்டுகிலேயை நம்மால் அறிய முடியவில்லை. எனவ்ே அக்கால வாய்மொழி இலக்கியத்தை வரையறுப்பது எங்ங்னம்? தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற லேங்களிலும் ஒரு காலத்தில் கடவுளர் தந்த இலக்கியங்களை ஏட்டில் வடிக்காது, - வாய்மொழி இலக்கியமாகவே போற்றி வந்துள்ளமையைக் காண்கின்ருேம். வடமொழியில் வேதம் பன்னெடுங்காலம் ஏட்டில் திட்டப்பெருது, செவி வழியாக மரபு நெறியில் வந்ததாகக் கேள்விப்படுகின்ருேம். .தமிழ்நாட்டிலே அத்தகைய முறையில் செவிவழியாக சில பரம்பரைகள் வரை வந்த தெய்வத்தன்மை பொருந்திய வாய்மொழி இலக்கியமாக இருந்து, பின் ஏட்டில் எழுதப் பெற்றதே இறையனர் களவியலுரை. நூலிலேயே அது அப்படித் தொடர்ந்து ஒருவரை அடுத்து ஒருவருக்கு வாய்மொழி யாக வந்தது என்று காண முடியும். இறையனர் களவியலுக்கு உரை தேர்ந்த முறையும் அதன் சிறப்புணர்ந்த வகையும் வாய்மொழி கேட்டுப் பெற்றனவே. மெய்யுரை பெற்ரும் இந்நூற்கு என்று .புலவர் அனைவரும் கூடி மகிழ்ந்த அந்த நிலையிலும் கூட யாரும் அதை எழுதி வைக்க முன்வரவில்லை. பொருளதி காரம் இல்லாது அவர்கள் பட்ட அல்லலுக்கு அவ்வாறு எழுதாது வளா இருத்தல் பொருந்துமா? ஒருவேளை தெய்வம தந்த இலக்கியமெனக் கருதி அப்படிச் செய்யவில்லையோ என நினைக்க வேண்டியுள்ளது. எனவேதான் அத்தகைய எழுதாக் கிளவிகளே மறை என்றும் வேதம் என்றும் வழங்கினர்கள் போலும். ஏறக்குறைய கடைச்சங்க கால மாகிய கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்ருண்டில் தோன்றிய வாய்மொழி இலக்கியமாகிய இறையனர் 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/34&oldid=900722" இலிருந்து மீள்விக்கப்பட்டது