பக்கம்:வானொலி வழியே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் களவியல் சுமார் ஆறு நூற்ருண்டுகள் கழித்தே ஏட்டில்’ எழுதப் பெற்றிருக்கும். எனவே அதன் காலத்தை எட்டாம் நூற்ருண்டு என்கின்றனர். இனி அவ்வுரை காட்டும் விளக்கத்தைக் காண்போம். "எல்லாரும் முறையே கேட்ப வாளா விருந்து, மதுரை மருத னிளகைனர் உரைத்தவிடத்து ஒரோவழிக் கண்ணிர் வார்த்து, மெய்ம்மயிர் நிறுத்தி, பின்னர்க் கணக்காயனர் மகனர் நக்கீரனர் உரைத்தவிடத்துப் பதக்தொறும் கண்ணிர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தனர். (மூங்கைப் பிள்ளை) இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்ரும் இந்நூற்கு என்ருர்.” இனி உரை நடந்துவந்தவாறு சொல்லுவதும். "மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீரனர். தம்மகளுர் கீரங்கொற்றனர்க் குரைத்தார்; அவர், தேனூர் கிழர்க் குரைத்தார்; அவர் படியங் கொற்ருனர்க் குரைத்தார்; அவர், செல்வத்தாசிரியர் பெரும்சுவனர்க் குரைத்தார்; அவர், ம ண லூ ர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருந்சேந்தனர்க் குரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப்பெருங் குமரனர்க்குரைத்தார்; அவர், திருக்குன்றத்தாசிரியர்க் குரைத்தார்; அவர், மாதவளனர் இளநாகனர்க் குரைத்தார்;. அவர், முசிறி ஆசிரியர் நீலகண்டனர்க் குரைத்தார். இங்ங்ணம் வருகின்றது உரை'. இவ்வாறு கடைச்சங்க காலத்தை ஒட்டிய நாளிலே பெரிய இலக்கணங்களும்கூட வாய்மொழியாக ஒருவர் வேறு ஒருவருக்குச் சொல்ல பல நூற்ருண்டுகள் கேள்வி" வாயிலாகவே வந்தது என்ருல் சிறுசிறு பாடல்களால் ஆகிய இலக்கியம் வளர்ந்திருக்கக் கேட்கவும் வேண்டுமோ! 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/35&oldid=900724" இலிருந்து மீள்விக்கப்பட்டது