பக்கம்:வானொலி வழியே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே கம்பன் காலத்தில் வழங்கும் கதை வாய்மொழி' இலக்கியச் சிறப்பை விளக்கச் சிறந்த சான்ருகும். அது கடந்த கதையாயினும் கற்பனையாயினும் அதன் கருத்தே போற்றக் கூடியது. கவிச்சக்ரவர்த்தி என்று போற்றிப் புகழப்பெற்ற கம்பனுக்கே வாய்மொழி இலக்கியத்தின் இரண்டாவது அடி தெரியவில்லை என்ருல் அதன் ஏற்றத்தை வேறு எப்படிக் காட்டுவது? ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை என்று கம்பனே கூறியதாக மரபு. 'மூங்கில் இலை மேலே என்று ஏற்றம் இறைப்பவன் விட்டு உணவுக்குச் செல்ல, அதை முடிக்க முடியாதவராய் நெடுநேரம் கம்பர் திகைத்து நிற்க, பின் அவனே உண்டு வந்து தூங்கும் பணி நீரே என்று முடித்தான் என்பர். பொருள் மிக எளிமையாகவே உள்ளது. எனினும் இதுவும் கவிச்சக்ரவர்த்திக்கே விளங்கவில்லை. இவ்வாருன ஏற்றப் பாடல்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்களேயாம். இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் எத்தனையோ வகையான வாய் மொழி இலக்கியங்கள் தோன்றலாயின. வழிநடைப் பதம், சிந்து, நாடக மரபு, நலுங்குப் பாட்டு, கதைப்பாட்டு முதலியன இடைக்காலத்தில் எல்லேயன்று விரிந்தன. கடைச்சங்க கால இலக்கிய மாகிய பரிபாடலில் ஆடற் பாணியும் வழிநடைப் பாணியும் வாய்மொழி இலக்கியங்களாக உள்ள தன்மையைக் காண்கிருேம். பரங் குன்றிலும், மதுரையிலிருந்து அப்பெருங்குன்றுக்குச் செல்லும் நெறியிலும், ஆடல் கவின்ருேரை அவர்போர் செறுப்பவும் பாடல் பயின்ருேரைப் பாணர் செறுப்பவும் ' - (பரிபாடல் 9 -72 & 73) 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/36&oldid=900726" இலிருந்து மீள்விக்கப்பட்டது