பக்கம்:வானொலி வழியே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் கலந்து மக்கள் சென்றதைக் காண்கின்ருேம். வையைப் புனலாடச் செல்வார் வாழ்த்தியும் வணங்கியும் பாடிய "வாய்மொழி இலக்கியப் பேரொலியையும் கிலையையும். " தாம் வேண்டும் பட்டினம் எய்திக்கரை சேரும் ஏமுறு நாவாய் வரவெதிர் கொள்வார் போல் யாம் வேண்டும் வையைப் புனல் (பரி: 10, 38 - 40) என்று உவமை முகத்தான் விளக்குவர். இப்படியே பல்வேறு புனல் விழாவுக்கும் பிற விழாக்களுக்கும் செல்லும் மகளிரும் மைந்தரும் தம்முள் மயங்கிப் பாடிய வாய் மொழி' இலக்கியங்கள் பல. அவற்றை நாம் பெற்ருேமில்லை. பிற்காலத்திலே வழிநடைப் பதம்' என்ற பெயரிலேயே சில பாடப்பெற்றன. அவற்றுள் ஒரு சில இன்றும் கிராம மக்களிடை வழக்காற்றில் இருந்து வருகின்றன. நகரச் சூழலே அறியாத எத்தனையோ கிராமங்களில் இன்றும் லட்சக்கணக்கான வாய்மொழிப் பாடல்கள் வாழ்கின்றன. அவற்றையெல்லாம் தொகுப்பின் தமிழ்நாட்டைப் பற்றியும் மொழியைப் பற்றியும் பல உண்மைகள் உணர்ந்து கொள்ளலாம். இந்த இலக்கியம் கல்லா மாக்கள் வெறும்பொழுது போக்குக்காக மட்டும் பாடப்படும் ஒன்று எனப் பலர் வினைக்கின்றனர். ஆய்ந்து பார்ப்பின் இந்த வாய்மொழி இலக்கியத்தின் பெருமை நன்கு விளங்கும். எனது இளமைக் காலத்திலே நான் கேட்டறிந்த சில இருசொல் முச்சொல் அலங்காரங்களே எண்ணிப் பார்க்கும்போது அவற்றின் சிறப்பும் சிலேடைப் பொருள் திறனும் பிற உண்மைகளும் விளங்குவதை இன்றும் அறிய முடிகின்றது. இரண்டொன்று இங்கே போதும். 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/37&oldid=900728" இலிருந்து மீள்விக்கப்பட்டது