பக்கம்:வானொலி வழியே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே ஆலிலை பழுப்ப தேன்? ' இராவழி நடப்ப தேன்?" இவை இரண்டும் கேள்விகள். இரண்டிற்கும் ஒரே பதில் சொன்னல் எத்துணை சிறக்கும் சொல்லுகிருர் ஒருவர்! யார்? இந்த ஆசிரியர்தம் பெயர்தாம் அறிய முடியாதே. எனவே ஒரு நல்ல அறிஞர். அவர் என்ன சொன்னர்? பறிப்பாரற்று' என்பதே பதில். ஆம். ஆலிலை பறிப்பார் இல்லாத காரணத்தாலே பழுத்து உதிர்கின்றது; அப்படியே இரவில் வழிப்ப்றிகொள்ளையர் இல்லாத காரணத்தாலேயே அனைவரும் நடக்கின்றனர். இவ்வாறு இருபொருள்பட விளக்கும் திறன் சிறந்த தல்லவா. இப்படியே, ஆட்டுக்கறி கசப்ப தேன்? ' ஆண்டி பட்டினி கிடப்பதேன்?" என இரண்டு கேள்விகளுக்கும் பிச்சை எடாமல் என்ற: பதில் உண்டு. இப்படியே, எருக்கிலை பழுப்ப தேன்?" எருமைக்கன்று சாவ தேன்?" என்ற இரு வினுக்களுக்கும் பாலற்று' என்பது பதில். இவற்றை விரித்துப் பொருள் காணும்போது நம்மை நாம் மறக்கிருே மல்லவா இப்படியே முச்சொல் அலங்காரங்கள். இவற்றுள் ஒரு சில அச்சிலும் வந்து மெல்ல மறுபடியும் மறைந்து கொண்டிருக்கின்றன என நினைக்கின்றேன். இவையெல்லாம். இன்று வழக்கு வீழ்ந்துவிடுமோ என்று. அஞ்சத்தக்க வகையில் உள்ளன. இவ்வாறே எத்தனையோ பழமொழிகளும் அவற்றின் அடியெழுந்த பாடல்களும் சிற்சில இடங்களில் வாழ்ந்து மறைகின்றன. எழுத்து. வாசனையே அறியாத கல்லாத குக்கிராமங்களில் இருக்கும். 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/38&oldid=900730" இலிருந்து மீள்விக்கப்பட்டது