பக்கம்:வானொலி வழியே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் இளையரும் முதியரும் இதுபோன்ற வாய்மொழி இலக்கி யங்களை இன்றும் பாடிக்கொண்டே இருக்கின்றனர். கருத்தும் காதும் வேண்டும் கேட்பதற்கு. விடுகதைகளைப் பற்றித் தொல்காப்பியத்திலேயே குறிப்பு வருகின்றது. இதுவும் ஒருவகை வாய்மொழி இலக்கியமேயாகும். உயர்ந்த வேதாந்தக் கருத்து தொடங்கி, எளிய உலக வாழ்க்கைப் பொருள் வரையில் இந்த விடுகதைகளில் இடம் பெறக் காண்கிருேம். இந்த இலக்கியமும் இன்று நாட்டில் அருகியே வருகின்றது. காரணம் நாம் மேலே கண்டதுதான்; மனிதன் இயந்திர மாக மாறிக்கொண்டு போவதுதான். இவைகளைத் தவிர்த்து காவடிச் சிந்து, புலந்திரன் களவு, அல்லி அரசாணி மாலை, கொண்டி நாடகம் போன்ற ஒரு சில சென்ற இரண்டொரு நூற்ருண்டுகளில் வந்தன. முருகன் சன்னதிக்கு அடியவர் தாம் வேண்டும் வரம்பெற்ற பின் காணிக்கை செலுத்திக் காவடி எடுத்துக்கொண்டு செல்லும் மரபு இன்றும் உள்ளது. அவ்வாறு செல்லும் போது அவர்கள் பாடிக்கொண்டு செல்லும் ஆரவாரம் செந்தில், பழகி, தணிகை முதலிய முருகன் திருநகரங்களில் இன்றும் ஒலிக்கின்றது. அதையே பின் வந்தவர் "காவடிச் சிங்தாக அழகுபடப் பாடி வைத்தனர். புலந்திரன் களவு போன்றவை கதைக் கூறுகளை மையமாகக்கொண்டு, கல்லாத மக்கள் - எழுத்தறியா மக்கள் சொல்லிச் சொல்லி உணர்ந்து மகிழத்தக்க வகையில் ஆக்கப்பெற்றன. பின் வந்த தேசிங்கு ராஜன் கதை போன்றவைகளும் இந்த வகையில் இணைக்கப்பெற வேண்டுபவையே. இவற்றுள் சில அச்சிடப் பெற்றுள்ளன. 37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/39&oldid=900732" இலிருந்து மீள்விக்கப்பட்டது