பக்கம்:வானொலி வழியே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே இவைகளைத் தவிர்த்துக் குழந்தையைத் தாலாட்டு வதும் கையற்றுக் கதறி அழுவதும்கூட வாய்மொழி' இலக்கியமாகக் கொள்ளத் தக்கவையே. எத்தனையோ தாயார் தம் மக்கள் முகம்மேல் முகம் வைத்து, மகிழ்ந்து பாடி அந்த இன்பத்தில் தம்மை மறந்திருப்பதைக் காண் கின்ருே மல்லவா படிப்பறியாப் பெண்களுங்குகூட, எதுகை மோனே இழையப் பொருள் பொதியப் பாடும் பாடல்கள் அச்சறியா நிலையில் உள்ளன. அப்படியே இழவு வீட்டில் பெண்கள் கூடித் கட்டித்தழுவிக் கதறிப்பாடும் பாட்டுக் களும் எதுகை மோனே நயத்தோடு கருத்தாழமும் கொண்டு விளங்கவில்லையா! இவற்றையெல்லாம் விளக்கிக்காட்ட லாம். காலம் கருதியும் அனைவரும் இவற்றை அறிவார் என்று எண்ணியும் காட்டாது அமைகின்றேன். அனைவரும் முயன்று அவற்றை யெல்லாம் தொகுத்து வெளிக்கொணர வேண்டிய கடமையை மட்டும் ஈண்டு நினைப்பூட்டு கின்றேன். தமிழ்நாட்டு விழாக்கள் பல விளையாட்டுக்களும் பல. நீர் விழா முதலியவற்றில் பாடப்பெறும் வாய்மொழி இலக்கியம் பற்றிக் கண்டோம். இளங்கோவடிகள் பல விழாக்களில் பாடும் பாடல்களைக் காட்டியமை உணர்ந் தோம். இவைபோன்ற விளையாட்டுகளிலேயும் ஆண்களும் பெண்களும் இளையரும் முதியரும் கலந்து பாடும் பாடல்கள் பல உள. சிறு பெண்கள் தெருவு தோறும் ஆடும் கல்லாட்டம், தட்டாட்டம், சப்பளம், கொம்மி முதலிய வற்றில் பாடும் பாட்டொலி இன்றும் கிராமங்களில் கேட்கின்றன. கொம்மி போன்ற ஒரு சில அச்சிலும் வருகின்றன. அம்மனே பாடி ஆடும் கழங்கு விளையாட்டு நாடறிந்த ஒன்று. ஏழாங்காய்' என்று ஏழுகாய்களை 38.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/40&oldid=900736" இலிருந்து மீள்விக்கப்பட்டது