பக்கம்:வானொலி வழியே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் வைத்துக்கொண்டு பெண்கள் போட்டியிட்டு, ஏழெழு முறை ஆடும்போது ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு வகைப் பாடலைப் பாடும் மரபு உண்டு. இவை யாவும் இன்று மங்கத்தொடங்கி விட்டன. போர்ப் பாடல்களில் பலவும் வாய்மொழி இலக்கியங்களாகவே இருந்து மறைந்து விட்டன. இவைகளை யன்றிப் பெரும் வேலைகள் செய்யும் பணி யாளர்களும், வயலில் பணிசெய்பவரும் பள்ளர்களும், மலே வாழ் குரவர்களும், மரங்கொல் தச்சரும் பிறரும் தத்தம் வேலையின் கொடுமையும் பளுவும் தோன்ருதிருக்கப் பாட்டிசைப்பது உண்டு. அவற்றுள் ஒரு சிலவே வளர்ச்சிப் பெற்று பள்ளாக'வும் குறவஞ்சியாகவும் எழுதப் பெற்றுள்ளன. இந்த இலக்கியங்களில் அவ்வந் நாட்டு இயற்கைச் சூழலும் விளைபொருள்களும் பிறவும் இடம் பெற்றுச் சிறப்பதோடு அவ்வங் கிலத்து வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளும் நன்கு காட்டப்பெறுகின்றன வன்ருே! இவ்வாறு எத்திசை கின்ருலும் எப்பக்கம் திரும்பி லுைம் எங்கே கோக்கிலுைம் எதை கினைத்தாலும் தமிழ் நாட்டில் வாய்மொழி இலக்கியம் ததும்பி வழிவதைக் காண்கிருேம். தொல்காப்பியனர் காலத்துக்கு முன், தொடங்கி நேற்றுவரையில் தமிழர் வாழ்வில் அவர்தம் உயிர். போல் இடம்கொண்ட இந்த வாய்மொழி இலக்கியம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கின்றது. எனினும் மறுபடியும் உயிர்பெற்று ஓங்கும் என்ற நம்பிக்கை உருவாகும் குழல்கள் தோன்றுகின்றன. இவ்வாய்மொழி இலக்கியத்தை 'நாடோடிப் பாடல் கள் எனச் சிலர் கூறுகின்றனர். அப்பெயர் அத்துணைப் 39.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/41&oldid=900738" இலிருந்து மீள்விக்கப்பட்டது