பக்கம்:வானொலி வழியே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே பொருந்துமா என எண்ண வேண்டியுள்ளது. சாதாரண பாமர மக்கள்-தம் வாழ்வைத் தேடித்திரியும் மக்கள்வாயிடை வழங்குவதால் அப்பெயர் பெற்றதுபோலும். நாடு விட்டு நாடு-ஊர்-காலம் விட்டுக் காலம்-காது. விட்டுக் காது இப்படித் தொடர்ந்து இந்த இலக்கியம் பரவி வருகின்றமையின் இப்பெயர் பெற்றதோ எனவும் கினைக்க லாம். எப்படியாயினும் இப்பெயர் அண்மையில் இடப் பெற்ற பெயரே என்பதில் ஐயமில்லை. உண்மையில் நாட்டுப் பழம் பண்பினைக்காண வேண்டுமாயின் இந்த வாய்மொழி இலக்கியத்தை வாழவைக்கும் அந்த 'நாடோடி'க் கும்பலைத் தான் நாம் நாடவேண்டியிருக்கும். சிலர் நாடத் தொடங்கி யுள்ளார்கள். அவர் வழி சிலசில தொகுப்புக்களும் வெளி வந்துள்ளன. இன்று அரசாங்கத்தாரே இத்துறையில் கருத்திருத்தி ஆவன செய்ய வந்துள்ளமை போற்றற்குரிய ஒன்ருகும். இனி, இந்த வாய்மொழி இலக்கியம் பாடும் வகை கண்டு அமைவோம். எங்கேயோ ஓரிரு பாடல்கள் தனிப் பட்டவரால் பாடப்படுவன என்ருலும் பெரும்பாலான பாடல்கள் கூட்டுப் பாடல்களே. இன்று கூட்டுச் சமுதாயம் காண விரும்பும் நிலையில் உள்ள நமக்கு, இந்தக் கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கி வளர்ந்து வாழவைத்து வரும் "வாய்மொழி இலக்கியம் இன்றியமையாது வேண்டப்படுவ: தாகும். இவ்வாறு கூடிப்பாடும் சிறப்பின யெல்லாம் தொகுத்துதான் பாரதியார், - " ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும் கோற்ருெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் கண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/42&oldid=900740" இலிருந்து மீள்விக்கப்பட்டது