பக்கம்:வானொலி வழியே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்படைத் தாலி 20-6-66 அப்போது நான் செங்கற்பட்டில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். (1929-30) விடுமுறையில் எனது கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு என் அன்னை யார் என் வாழ்வே தன் வாழ்வாக எண்ணி, நிலம் முதலிய வற்றை மேற்பார்வை செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அதிகமாகப் படித்தவர்கள் இல்லை என்ருலும் தமிழ்ப் பாடல்களைப் படித்துப் புரிந்துகொண்டு பொருள் சொல்ல வல்லவராயிருந்தனர். அதிலும், புராண இலக்கியங்களில் அவர்கட்கு ஆர்வம் உண்டு. இரவில் எனக்கு அவர்கள் தமிழ்ப் பாடல்களைச் சொல்லித் தருவார்கள். நான் ஊர் சென்ற போது, எனது தமிழ்ப் பாட நூலே யும் எடுத்துக்கொண்டு சென்றேன். அதில் திருவிளையாடற்: புராணத்து, மாமனக வந்து வழக்குரைத்த காதை"யும் எனது பாடமாகத் தொகுக்கப் பெற்றிருந்தது. அதில் ஒரு சில பாடல்களே வகுப்பில் நடந்திருந்த போதிலும், கதை, இனிமையாக இருந்ததோடு எனது அன்னயாரும் அருகி. லிருந்து விளக்கிக் கொண்டே வந்தமையின் முழுவதையும் படித்துவிட கினைத்தேன். ஒரு நாள் அவர்கள் பாடல்களே 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/44&oldid=900744" இலிருந்து மீள்விக்கப்பட்டது