பக்கம்:வானொலி வழியே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்படைத் தாலி விளக்கிக் கொண்டே வந்தபோது, ஒரு பாடலைக் கேட்டுக் கண்ணிர் உகுத்தார்கள். எனது அன்னையாருக்கு நான் ஒரே மகன். நாங்கள் இக் கதையில் உள்ளவரே போன்றவர்கள். எனவே, அன்னயாரும் ஆண்டவனேயே அடைக்கலமாக எண்ணி வாழ்ந்தவர்கள். ஆகவே, நான், " ஒருத்திநான் ஒருத்திக்கிந்த ஒருமகன் இவனும் தேரும் கருத்திலாச் சிறியன் வேறு களைகணும் காணேன் ஐய! அருத்திசால் அறவோர் தேரும் அருட்பெருங் கடலே எங்கும் இருத்திரீ அறிவாய் கொல்லோ என்று பார்படிய வீழ்ந்தாள். ' என்ற புராணத்துப் பாடலைப் பாடும் போது அன்னேயார் அப்படியே கண்ணிர் விட்டுக் கதறினர்கள். நானும் ஓரளவு குடும்பச் சூழலே உணர்ந்தவனதலால் கைக்தேன். பிறகு அவர்கள் தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு மேலே படிக்கச் சொன்னர்கள். . அந்தப் புராண அன்னேயின் வேண்டுகோளின்படி மதுரைச் சொக்கேசர் மறுகாள் மாமனக வந்து வழக் குரைக்கிருர். அதன் முதற்படியிலேயே அவர் அவ்வொரு மகனே'க் கண்டு கட்டிக் கொண்டு கதறி அழுகிருர். அவர் வாய் பேசுகிறது. அதைப் பரஞ்சோதியார் தருகிருர். " ஐம்படை மார்பிற் காணேன் சிறுசிலம் படியிற் காணேன் மொய்ம்பிடை மதாணி காணேன், முகத்தசை சுட்டி காணேன் மின்படு குழைகள் காணேன் வெற்றுடல் கண்டே னப்பா என்பெறு மென்று பிள்ளைப் பணிகளும் கவர்ந்தார் என்னு: ' 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/45&oldid=900746" இலிருந்து மீள்விக்கப்பட்டது