பக்கம்:வானொலி வழியே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே என்ற சொக்கேசர் வாய்மொழியாகக் காட்டிய அப்பாடல் என் உள்ளத்தைத் தொட்டது. அன்னையாரும் விளக்கத் தொடங்கினர்கள். - 'இப் ப்ாடலில் வரும் அணிகள் அனைத்தும் குழந்தை கள் அணிவதற் கமைந்தன. ஐம்படை ஆண் குழந்தை களுக்கு அணியும் சிறந்த அணியாகும். பெற்ருேர் பலவித அணிகளிட்டுக் குழந்தைகளைச் சீராட்டி மகிழ்வார்க ளல்லவா? ஐம்படை, சிலம்பு, மதாணி, சுட்டி, குழை இவை அவற்றுள் சில. ஆயினும் இவற்றுள் மேம்பட்டது - உயர்ந்தது - முதலில் வைத்து எண்ணத் தக்கது - போற்றிப் புரக்கத் தக்கது ஐம்படை என்னும் அணியாகும். அதனலேயே பரஞ்சோதியார் மற்ற அணிகளைப் பின் தள்ளி இந்த ஐம்படையை முதலாவதாக வைத்துப் பாடியுள்ளார்” என்றனர். - ஐம்படை என்ருல் என்ன? அதற்கு அவ்வளவு முக்கியம் ஏன்? குழந்தைகளுக்கு எவ்வாறு படைகளே அணிவிப்பார்கள்? அவற்றைக் குழந்தைகள்தாம் எவ்வாறு தாங்குவார்கள்? அவற்றை அணிவிப்பதால் என்ன பயன்? அழகுதான் உண்டா? என்றெல்லாம் அன்றைய எனது இளம் உள்ளத்தில் வினுக்கள் எழுந்தன. அக் கிலையைக் குறிப்பால் உணர்ந்த என் அன்னையார் மேலும் விளக்கத் தொடங்கினர்கள். : "உலகைக் காக்கும் கடவுள் திருமால். அவ்விறை யருளால் மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தமக்குரிய கடமை நெறி வழுவாமல் அவரவருக்குரிய அறவாழ்வைக் காத்து அந்த வாழ்விலே நாட்டையும் கலத்தையும் ஊரையும் உலகையும் ஒம்பக் கடமைப் பட்டவர்கள். எனவேதான் மக்களுள் தலையாய, காக்கும் மன்னனைத் 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/46&oldid=900748" இலிருந்து மீள்விக்கப்பட்டது