பக்கம்:வானொலி வழியே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்படைத் தாலி திருமாலின் அவதாரம் என்று கூறினர்கள். இளங் குழந்தைப் பருவம் தொட்டே தமக்கும் பிறருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளே உணர்ந்து, மக்கள் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் பண்பாட்டு நெறி பழந்தமிழ ருடையது. அவற்றுள் ஒன்றே அணிகலன் பூட்டுவது. அணிகள் பலவும் அழகுக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு நிலைக்களன்களாக அமைந்து விளங்கவே அணியப்பெற்றன. அவ் வணிகளுள் சிறந்தது ஐம்படை அல்லவா? எனவே இதை அணியும் போது குழந்தைகளின் உணர்வு உயர்தல் வேண்டும். நாடு, மக்கள், சமுதாயம் என்ற உணர்வு அரும்பி அவற்றைக் காக்கும் திறனையும் பெறுதல் வேண்டும். "ஐம்படை என்பது திருமாலின் பஞ்ச ஆயுதங்களையும் குறிக்கும். அவை சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்பன. இந் ஐந்து உருவங்களேயும் பொதித்தோ அன்றி ஐங்தையும் தனித்தனி உருவங்களாகச் செய்தோ சிறு அணி யாக்கிக் கயிற்றிலோ பொன்னளிலோ கோவையாக்கி அணிந்து - மார்பில் தொங்கவிட்டுப் பெற்ருேர் உளம் மகிழ் வதோடு பிள்ளைகளை வீரர்க ளாக்கவும் முயல்வார்கள். ஐம்படை அணிந்தால் வீரராகவும் கடமை உணர்ந்தவ ராகவும் ஆக முடியுமா?" - "ஆம்! முடியும். இந்த ஐம்படைகளுக்கும் உரிய திருமால் எவ்வாறு தன் கடமை வழுவாது உலகிலே உள்ள உயிர் களைக் காப்பாற்றுகிருரோ, எந்தத் துன்பத்தையும் பொருட் படுத்தாது, பிறர் வாடாது வாழ்தலே கடமை என்று - தேவையாயின் அவதாரம் எடுத்து, தன் விண்ணுலக வாழ்வி லிருந்து இறங்கி வந்து, வீரம் விளேத்தும் தீரம் காட்டியும் துன்பம் நீக்கி இன்ப ஆக்கத்துக்கு வழிகோலுகிருரோ, அப்படியே இந்த ஐம்படைத் தாலியை அணியும் குழந்தை 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/47&oldid=900750" இலிருந்து மீள்விக்கப்பட்டது