பக்கம்:வானொலி வழியே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே களுக்கும் உலகையும் ஊரையும் காட்டையும் கலத்தை யும் காக்க வேண்டும் என்ற உணர்வு அரும்பல் வேண்டும். அவ்வுணர்வே வருங்காலத்தில் அவர்களைச் சிறந்த வீரர் களாக்கி விழுமிய பண்புளத்தோடு தம்மையும் தம்மைச் சார்ந்தவரையும் ஊரையும் காட்டையும் உலகையும் காக்கும். கடமையும் வீர உணர்வும் கொண்டு வாழ வழி கோலும். திருமால் எப்படிப் பல அவதாரங்கள் எடுத்து, வீரமும், கடமை உணர்வும் கொண்டு மறம் மாய்த்து அறம் தழைக்க ஆக்கப் பணி புரிந்தாரோ அப்படியே இந்த ஐம்படைத் தாலி அணியும் ஆண்மகன் சிறந்த வீரகை - நாட்டைக் காக்கும் நல்லவகை - கடமை நெறி உணர்ந்தவகைத் திகழ, வேண்டும். பழங்காலப் பாரத மக்கள் தம் காட்டுக்கும் மக்கட் சமுதாயத்துக்கும் உயிருக்கும் உலகுக்கும் தாம் ஆற்ற வேண்டிய கடமை உணர்வை நன்கு உணந்தவரா தலால், தம் ஆண் மக்களே அந்த நல்ல நெறியில் இளமை முதலே பழக்கப்படுத்தும் வகையில் இவ்வணிகளைப் பூட்டி மகிழ்ந்தார்கள். அதிலும் சிறப்பாக இந்த ஐம்படைத் தாலியை மார்பில் நிறுத்தி, கண்ணுக்கு முன்னுல் அதைக் காணும் தோறும் கடமை உணர்வை இளங்குழந்தைகளுக்கு உண்டாக்கினர்கள். பெண்களுக்குத் தம் மார்பிடையில் காணும் தாலி கற்பின் பொற்பை நினைவூட்டுவது போன்றே ஆண் பிள்ளைகளுக்கு இவ்வைம்படைத் தாலியே வையத்தை வாழ வைக்கும் வற்ருத உள உரத்தினையும் உணர்வையும் ஊட்டும். இவ்வாறு பண்டைக் காலத்தில் ஆண்களும் பெண்களும் வருங்காலக் கடமை உணர்வைக் காட்டும் அணிகள் பல அணிந்திருந்தனர்.” என் அன்னையார் தந்த விளக்கம் இது. அப்போது. நான் மிகச் சிறியவனதலால் இவ்வளவையும் எண்ணிப் 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/48&oldid=900752" இலிருந்து மீள்விக்கப்பட்டது