பக்கம்:வானொலி வழியே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்படைத் தாலி பார்க்கும் ஆற்றல் பெறவில்லை. எனினும் ஓரளவு புரிந்து கொண்டேன். பின் தமிழ்த்துறையில் புகுந்து. தமிழைச் சிறப்பாகக் கற்கும் வாய்ப்பு உண்டான போது இதன் பொருள் நன்கு புலயிைற்று. ஐம்படையணிந்த சிறுவர் தம். ஏற்றமும் பிற சிறப்புக்களும் நன்கு விளங்கின. ஒரு மன்னன் இளையவனுயிருக்கும் போதே வீரம் விளைத்த, செயல் கண்டு, இவன் இளமையோடு வீரத்தையும் இணைத்த, சங்க காலப் புலவர் தாலி களைந்தன்றும் இலனே' என்று. பாராட்டிய புறநானூற்றுப் பாடலப் படிக்கும் பொழுது உணர்வு பெற்றேன். ஆயினும் அவற்றை எல்லாம் இப்படித் தொகுத்து உங்கள் முன் எடுத்துரைக்கும் வாய்ப்பினைப் பெறுவேன் என எண்ணவில்லை. வாய்ப்பளித்த வானெலி வாழ்வதாக! இந்த ஐம்படைத் தாலி அணியும் வழக்காறு தமிழகத் துக்குப் புதியதன்று. மிகப் பழங்காலத்தில் இலக்கியங்கள் இதன் சிறப்பை உணர்த்துகின்றன. புறப்பாடலை பற்றி முன்னரே குறித்தேன். அதன் விளக்கத்தை மேலும் பார்ப் போம். இடையில் மற்றவர் பாடிய பாடல்களையும் காண்போமா? . * இளங்குழந்தைகளே வீரராக்கும் நிலையில் ஐம்படைத் தாலியைக் கட்டிய மரபினை மணிமேலே ஆசிரியர் சீத்தலைச் சாத்தனர் நன்கு விளக்குகிருர். இளங் குழந்தை தத்தி நடக்கும் தளர் கடைப் பருவத்தில் - திருந்திய சொற்கள் வாராத வாயிலே உமிழ்நீர் சுரந்து உதட்டின் வழி உருண்டோடி வருகின்றது. அங்கீர் இவ்விளம் பிள்ளையின் மார்பில் அணிந்துள்ள ஐம்படைத்தாலியைகனைத்து, மேலும். கீழே இழிகிறது. இந்தக் காட்சியினைக் கண்ட சாத்தனர், 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/49&oldid=900754" இலிருந்து மீள்விக்கப்பட்டது