பக்கம்:வானொலி வழியே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே " செவ்வாய்க் குதலை மெய்பெரு மழலை சிந்துபு சில்ர்ே ஐம்படை நனைப்ப ' (மணி. 3. 137 - 38) என்கின்ருர். அவரே மற்ருேளிடத்தில், " அமளி துஞ்சும் ஐம்படைத் தாலி குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு" (7.56&57) என ஆண் பிள்ளைகளுக்கு இளமையில் அணியும் தாலி பற்றி விளக்கி உரைக்கின்ருர். இவற்றின் வழி நன்கு பேசும் பருவம் வருமுன்பே - மழலை பேசும் அந்த இளம்பருவத் திலேயே ஆண்பிள்ளைகளுக்கு ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் உண்டு என உணர முடிகின்ற தல்லவா? சுந்தரர் இறைவரால் தடுத்தாட் கொள்ளப்பெற்றவர். 'ஒருவரை மதியாது உருமைகள் செய்தும் ஊடியும் உறைப் பய்ைத் திரிவேன்' என வீறு பேசிய வாய் அவருடையது. அந்த உறைப்பும் செருக்கும் சுந்தரருக்கு ஊட்டியது யார்? அவர் தம் பெற்ருே ரன்ருே? எவ்வாறு? இளமையில் அவர் மார்பிடை ஐம்படைத் தாலி அணிவித்து அதன் பொருளே விளக்கி வாழ வைத்தார்கள். அத்திறனைச் சேக்கிழார் பெருமான், " ஐம்படை சதங்கை சாத்தி அணிமணி சுட்டி சாத்தி செம்பொன்காண் அரையில் மின்னத் தெருவில்தே ருருட்டு - நாளில் ' (தடு. 2) என்று காட்டி அவர் அணிகளுள் ஐம்படையே முதலிடம் பெற்ற தென்பதனையும் நன்கு விளக்குகிருர். இத்தகைய புலவர் தம் அடி ஒற்றி, இராமாயணம் என்னும் பொருங்காப்பியம் செய்த கம்பரும் இந்த .ஐ ம் ப ைடயி ன் பெருமையைப் பாராட்டியுள்ளார். 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/50&oldid=900758" இலிருந்து மீள்விக்கப்பட்டது