பக்கம்:வானொலி வழியே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்படைத் தாலி இராமாயணக் கதையைத் தொடங்குமுன்பே - அதில் வரும்" பாத்திரப் படைப்புக்களுக்கு உணர்வு வீரம் ஊட்டுவதற்கு முன்பே, காட்டுப் படலத்தில் இந்த ஐம்படைத் தாலி" குட்டப் பெற்ற அங்காட்டு இளஞ்செல்வங்களே நமக்கு அறிமுகப்படுத்துகிருர். இளங் குழந்தைகளுக்குத் தாயார் பாற்சோறு ஊட்டு: கின்றனர். அவர் ஊட்டுகின்ற காலமோ மாலேக் காலம். அவர்தம் கைகளோ கமலம் போன்றவை. சோறு பிசைந்து. தம் விரல்களைக் குவித்து அவ்வமுதினே. இளங் குழந்தைகள் வாயில் ஊட்டுகின்றனர் அம் மகளிர். அவர் தம் கைகளாகிய கமலம் குவிவதற்குக் காரணம் கண்டார் கம்பர் - காட்டு: கின்ருர். மாலேக் காலத்து கிறைமதி கண்டு கரங்களாகிய தாமரை குவியத் தம் மக்களுக்குப் பாற்சோறு அளிக்கின் றனர் என்கின்ருர். அக் குழந்தைகளின் அணி யாது? ஆம்!, மார்பில் ஐம்படைத்தாலி அழகுற மின்னும் இளஞ் செல் வங்களாகிய மக்கள் என வீறு தோன்றப் பாடுகிரு.ர். " தாலி ஐம்படைத் தழுவு மார்பிடை மாலைவாய் அமுது ஒழுகும் மக்களைப் பாலின் ஊட்டுவர் செங்கை பங்கயம் வாள்கிலா உறக் குவிய மானுமே ' (நாட்டு. 58), இவ்வாறு மிகப் பழங்காலக் தொட்டு இன்று வரை வாழ்ந்த பெரும் புலவர்கள் ஐம்படைத் தாலியைப் பாராட்டி யுள்ளனர். வீரமும் கடமையும் செம்மையும் தியாகமும் நினைவில் வரும் போது அவை ஆடவர் உள்ளத்து இளமை யிலேயே அரும்பும் வகையில் அவ் வாண்குழந்தைகளுக்கு, ஐம்படைத்தாலி அணிந்துள்ள சிறப்பினைப் பாராட்டு, கின்றனர். இவ்வாறு ஐம்படைத்தாலியின் ஏற்றத்தையும் 49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/51&oldid=900760" இலிருந்து மீள்விக்கப்பட்டது