பக்கம்:வானொலி வழியே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே அழகையும் காட்டிய புலவர் பலர். விரிப்பில் பெருகும், இத்தகைய மரபுக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரம் விளக்கும் ஆற்றலைக் கண்டு அமைவோம். பாண்டியன் நெடுஞ்செழியன் சிறந்த வீரன்; தலையாலங் கானத்துச் செருவென்றவன். இளமையிலேயே அவன் வீரம் விளங்கிற்று. அவன் இளமையினை எள்ளிப் போராட வந்த எழுவர் கல்வலம் அடங்க வென்ற வீரன் அவன். அவன் இளமை சுட்ட வந்த புலவர் இடைக்குன்றார் கிழார், தாலி களைந்தன்றும் இலனே' என்று பாராட்டு கிருர். எனவே அவன் வீர வாழ்வுக்கு உணர்வூட்டிய இளமையில் பூட்டப் பெற்ற தாலி, இளமை நீங்காமையின், அவன் மார்பைத் தழுவி கின்றது என அறிகிருேம். அத் தாலி ஐம்படைத் தாலியே. அதை அணிந்த வீரர் வெறும் பேராற்றல் மட்டுமன்றி வேறு பல நல்ல பண்புகளும் உள்ளவராக அமைகின்றனர் என்பதை அதே புல்வர் பாட்டின் பிந்திய அடிகளால் விளக்குகிரு.ர். வீரத்தால் ஏமாப்பதும், அதனல் கொடுமை இழைப் பதும் தாலி அணிந்தவர் செயல்ன்று. வலிய வந்தவரை -உடன்று ஒன்றி மேல் வந்தவரை - வலம் அடங்க அலறத் தாக்கும் உரம் அவர்களுடையது. அந்த வீரம் பற்றிப் பெருமை கொள்வதும் வீழ்ந்தாரை இகழ்வதும் அவர் செயலன்று. கடமை வழிச் செயலாற்றுவதே அவர் பண்பு. வெற்றியை விழாவாகக் கூட அவர்கள் கொண்டாட மாட்டார்கள், இத்தகைய பண்புகள் அனைத்தும் ஐம்படைத் தாலி அணிவதால் உண்டாகின்றன என்கின்ருர் இடைக் குன்றுார் கிழார். அவர் வாய்மொழி காண்போம். 50.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/52&oldid=900762" இலிருந்து மீள்விக்கப்பட்டது