பக்கம்:வானொலி வழியே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்படைத் தாலி " தாலி களைந்தன்று மிலனே, பால்விட்டு அயினியும் இன்றயின்றனனே, வயின்வயின் உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை வியந்தன்று மிகழ்ந்தன்று மிலனே, அவரை அழுந்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பெழ கவிழ்ந்து நிலம்சேர அட்டதை - மகிழ்ந் தன்றும் மலிந்தன்றும் இலனே " (புறம். 77) இவ்வாறு பண்டு தொட்டு, பண்புக்கும் கடமைக்கும் விரத்துக்கும் தியாகத்துக்கும் சின்னமாக அமைந்த ஐம்படைத்தாலி இன்று நாட்டில் அருகிவிட்டது. அதை அறிவாரே இலர் எனக் கூடச் சொல்லலாம். உரிமை பெற்ற கம் பாரத நாட்டில் வீரம், பண்பு முதலிய நல்லியல்புகளைப் பண்டைத் தாய்மார், தம் இளங் குழந்தைகளுக்கு ஊட்டிய வகையில் - வழியில் - இன்று நம் மகளிர் செல்லல் வேண்டும். தம் நாடு - மக்கள் - சமுதாயம் என்ற விழிப் புணர்ச்சியும் வீர உணர்ச்சியும் இளமையிலேயே மக்களுக்கு அரும்ப வேண் டு மா யி ன், தாயார், குழந்தைகளுக்கு 'ஐம்படைத் தாலி அணிவித்து, அதன் சிறப்பை அவர் களுக்கு விளக்க வேண்டும். இந்த நல்ல உணர்வை நெடுஞ் செழியன் இளமையில் பெற்றதனலேயே அஞ்சாது சேர்ந்து வந்த எழுவரைத் தேய்த்தான். இன்றைய மக்கள் இதை உணர்ந்து, ஐம்படைத்தாலி போன்ற அணிகளும் அவற்றின் வழி அரும்பும் உணர்வும் காட்டில் பல்கிப் பரவி ஓங்க முயன்று, இளைஞர்களை வளர்ப்பார்களாயின், எழுகடல் உள்ளிட்ட உலகமே எதிர்ந்து வரினும் பாரதம் அஞ்சாது .கிமிர்ந்து நின்று வெற்றி பெறும் - பண்புடன் வாழும் . பாரி லுக்கு நல்வழி காட்டும் பாரத மக்கள் - சிறப்பாக அன்னேயர் - இவ்வாக்க நெறிக்கு ஆவன செய்வார்களாக. வணக்கம்| 51.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/53&oldid=900764" இலிருந்து மீள்விக்கப்பட்டது