பக்கம்:வானொலி வழியே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவடிச் சிந்து 1 1-2-1968 வளர்ந்து வரும் மனித சமுதாயத்தின் வாழ்வில் எத்தனையோ இலக்கியங்கள் உருவாகின்றன. வாழும் மக்கள் வாழ்க்கைநிலை, அமைதி, ஆரவாரம், பணி, பண்பாடு இவற்றின் அடிப்படையிலும் அவரவர் ஆற்றும் விழாக்கள் அடிப்படையிலும் பலவகைப் பாடல்கள் தோன்றுகின்றன. சில நல்ல இலக்கியங்களாக எழுதிவைக்கப் பெற்று. காலத்தை வென்று வாழ்கின்றன. ஒரு சில செவி வழியாக வந்து சமுதாயத்தில் எழுதாக் கிளவிகளாக வாழ்கின்றன, சில பாடல்கள் நாட்டில் பல நூற்ருண்டுகளாகக் கல்லா மக்களிடையிலும் கற்ருர் ஒரு சிலரிடையிலும் உயிருக்கு ஊசலாடிக் கொண்டே வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் ஒன்றே சிந்து' என்பதாகும். தொல்காப்பியத்தில் பண்ணத்தி என்று குறிக்கப் பெறும் பாடல்வகை இச்சிந்து போன்றது என்ற கொள்கை யும் உண்டு. பண்ணத்தி பற்றிய குத்திரத்திற்கு உரை எழுத வந்த பேராசிரியர், அவையாவன நாடகச் செய்யு. ளாகிய பாட்டும் அடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின.அவை வல்லார் வாய்க் 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/54&oldid=900766" இலிருந்து மீள்விக்கப்பட்டது