பக்கம்:வானொலி வழியே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவடிச் சிந்து கேட்டுணர்க' என விளக்குவர். எனவே வாய்மொழி இலக்கியமாகவே நாடக அமைப்புக் கேற்ற பாட்டாக இது அமையும் எனக் கொள்ளலாம். "சிந்து'சிலப்பதிகாரஉரையிலே குறிக்கப் பெறுகின்றது. பெரும்பாலும் மூன்று சீர்கள் பெற்ற சிந்தடியாலானதால் இப்பெயர் பெற்றதென்பர். இசைப்பா வகையில் ஒன்று எனச் சிலம்பின் உரையில் காண்கின்ருேம். (சிலம்பு 6-35). இது ஒரு வகை இசைப்பாவாக - பண் பொருந்தியதாகப் பாடப்படும் வரிக்கூத்து போலும். சிந்து என்ற சொல்லுக்கே பண் என்ற பொருளும் உண்டு என்பதைச் சிக்தொக்கும் சொல்லினர் என்ற கம்பன் அடி விளக்காவிற்கும். எனவே "சிந்து இசையொடு பொருந்திய ஒருவகைப் பாடலாகக் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் காட்டு மூலை முடுக்குகளில் அமைதியாக உலவி வருவது என்பது தெளிவு. சங்க காலத்தில் மதுரையிலிருந்து இமயக் குன்றம் நிகர்க்கும் பரங்குன்றுக்கு அறுமுகன் விழாக் காணச் சென்ற வர்கள் பண்பொருந்தப் பாடியும் ஆடியும் இத்தகைய சிந்து களே இசைத்துச் சென்றதையும் வையையில் ரோடும் காலையில் இத்தகைய பண் ஒன்றிய பாடல்களைப் பாடியதை யும் பரிபாடல் முதலிய இலக்கியங்கள் வழி அறிகிருேம். வாய்மொழியாகவே வந்த இந்தச் சிந்து பிற்காலத்தில் பலவாக வளர்ந்துகின்ருலும் வழிகடைச்சிந்து, காவடிச்சிந்து என்ற இரண்டுமே அவற்றுள் சிறந்து காலத்தை வென்று வாழ்கின்றன. சென்ற நூற்ருண்டின் இடையில் சிந்து பல்வேறு வகையில் சமயச் சார்பாகவும் தனிமனிதர் பற்றியும் உண்டாயின என அறிகிருேம். அவற்றுள் சில வருமாறு. 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/55&oldid=900767" இலிருந்து மீள்விக்கப்பட்டது