பக்கம்:வானொலி வழியே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே கணபதி நாயுடு பாடிய வழிநடைச் சிந்தும் முஹிதின் பிச்சைப் புலவர் பாடிய வழிநடைச்சிந்தும் கடக்கும் வருத்தம் தெரியாமல் வழியில் மகிழ்ச்சிப் பெருக்கால் பாடும் சிந்துகளாகும், இஸ்லாம் மதத்தினர் நபி புகழ், அவர்தம் சமய உண்மை முதலியன பற்றிப் பாடிய சிந்து சிலவும் உள்ளன. அப்படியே வள்ளிச் சிந்து, வீரராகவர் சிந்து போன்றவை, அவரவர் திருவிழாக்களுக்குச் செல்பவர்கள் வருத்தம் தெரியாமல் பாடிக்கொண்டு சென்றனவாக உள்ளன. மற்ருெரு வழிகடைச் சிந்து சின்ன காலேஜ்' என வழங்கிய பீபில்ஸ் பார்க்குக்கும் மயிலே அறுபத்து மூவருக்கும் சென்று வரலாம் என்று ஒரு காதலி தன் காதலனை அழைக்கும் முறையில் அமைந்துள்ளது, இவற்றின் அடிகளையெல்லாம் படிக்கும் போது மக்கள் உள்ளத்தே பொங்கிய மகிழ்ச்சியின் எல்லே நமக்கு விளங்கு கிறது. இவையன்றி கொண்டிச் சிந்து என்ற பாடலும் உண்டு. குற்ருலக் குறவஞ்சியில் சிந்து என்றே ஒரு பாடல் உள்ளது. இந்த வழிநடைச் சிந்தினைத் தவிர்த்து தாது வருடப் பஞ்ச ஒரடிச் சிந்து கப்பற் சிந்து', பஞ்சாட்சரச் சிந்து', வெண்ணிற்றுச் சிந்து', 'காட்டுச் செல்வரை ஒட்டாண்டி யாக்கும் மால் காட்டும் மங்கையர் சிந்து' எனப் பல வகையில் சிந்து உள்ளமை அறிகிருேம். இச்சிந்தினைப் பற்றிச் சென்ற நூற்ருண்டில் மேலே நாட்டிலிருந்து வந்த ஜான் முருடாக் போன்றவர்களும் ஆராய்ந்துள்ளனர். “This consists of four stanzas, the first of which is preceded by a short intercalary line, which is repeated 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/56&oldid=900770" இலிருந்து மீள்விக்கப்பட்டது