பக்கம்:வானொலி வழியே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவடிச் சிந்து before each of the other. It is reakoned a low order of *Poetry. It is much used the Dramatic Composition” (John Mordoeh) இவருடைய கடைசிக் கருத்து தொல்காப்பிய உரையாசிரியர் கருத்தினை ஒத்துள்ளது. சாதாரணமான பல்லவி, அனு பல்லவி, சரணம் பொருந்திய பாடல்களைச் சிலர் சிந்து எனக் காட்டிக் கண்டனர் போலும். இவர் கூறும் கருத்துக்களே அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அந்த மேலே நாட்டு அறிஞர் இச்சிந்தி சீனப் பற்றி ஆராய்ந்து வெளி யிட்ட கருத்தினைப் போற்றவேண்டியுள்ள தல்லவா? இன்று இத்தகைய வாய்மொழி இலக்கியங்களைத் துருவிக் காணும் உணர்ச்சி மக்கள் உள்ளத்தில் மலர்ந்துள்ளது. அதன் எதிரொலியே இன்றைய பேச்சும் எனக் கொள்வதில் தவறில்லை. இனி, காவடிச் சிந்து பற்றிக் காண்டோம். இறை வனுக்கு-சிறப்பாக முருகனுக்குக் காவடி எடுக்கும் மரபு தமிழ்நாட்டில் பழங்காலத்திலிருந்து இன்றுவரை நடை பெற்று வருவதாகும். காவடி என்பது காவு-தடி' என இரு சொல்லால் ஆகிய தொடர் என்று பல்கலைக்கழகப் பேரகராதி விளக்கம் தருகிறது. (லெக். 903) காவினத் தாங்கிய தடி' எனப் பொருள் கொள்ளவேண்டும் போலும், சிறு தெய்வங்களுக்கு இடும் பலியை இன்றும் காவு' எனக் கூறுகின்ருேம். அக்காவினைத் தாங்கும் தடியைத் தம் தோளில் ஏந்திச் செல்வதே காவடி எடுத்தல்' ஆகின்றது. காவுதல் என்ற சொல்லுக்கே சுமத்தல் என்ற பொருளும் உண்டு. 'காவி னெங்கலனே' (புறம் 206) ஊனைக் காவி உழிதர்வர் (தேவாரம் அப்பர் - ஆன க்கா) 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/57&oldid=900771" இலிருந்து மீள்விக்கப்பட்டது