பக்கம்:வானொலி வழியே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே என்ற பழம்பாடல்கள் இதற்குச் சான்ருகும். எனவே காவடி அடியவர் ஆண்டவனுக்குத் தாம் படைக்க நினைக்கும் பொருள்களைத் தாங்கிச் செல்வது என்ற பொருளில் அமைகின்றது. "காவு என்ற சொல் பிற்காலத்தில் உயிர்ப் பலியை குறிப்பதாக அமையினும், பண்டைய நாளில் அடியவர் நம்மை ஒறுத்து, தியாகம் செய்யும் நிலையில் இறை வனுக்கு உரிமையாக்கும் எப்பொருளையும் குறிக்கும் என்பது தெளிவு. - பல விடங்களில் கோயில் கொண்டுள்ள இறைவனே எங்கெங்கோ வாழ்கின்ற மெய்யடியவர் நினைத்து முடிந்து வைத்த பொருள்களே, விழாக்காலங்களில் அவ்வத்தலங் களுக்கு ஏற்றிச் சென்று அவன் முன் இட்டு வணங்குவது இன்று வரையில் காணும் மரபாகும். அவ்வாறு செல்லும் தூரம் சில வேளைகளில் பல காதங்கள் கடந்தும் அமைய லாம். இன்று பல்வேறு சாதனங்கள் பெற்ற நமக்குப் பல்லாயிரக்கணக்கான காதங்களும் பொருட்டல்ல என்ரு லும், அன்று ஒரு காத தூரமும் கால்கடுக்க கடக்கும் நிலையில் செல்ல வேண்டியதுதானே. ஆம்! அவ்வாறு செல்லும் வருத்தம் தெரியாதிருக்கவேதான் அடியவர்கள் "சிந்து பாடிச் சிங்தை மகிழ்ந்து சென்ருர்கள். சிந்தையை' மகிழ்வித்த காரணத்தில்ைதான் இதற்குச் சிந்து எனப் பெயர் வந்ததோ என எண்ணலாம். இவ்வாறு தம்மை மறந்த அடியவர் தத்தம் வரந்தரு தெய்வத்துக்கு முடிந்து வைத்த-முந்தி வைத்த-காணிக்கைப் பொருள்களைச் சுமந்து அவன் சங்கிதி நாடிச் செல்லும் வழிநடையில் பாடிச் செல்வதே காவடிச் சிந்தாகும். இக்காவடிச் சிந்தின் அமைப்பைப் பற்றி இனிக் காண் போம். காவடிச்சிந்து பல பாடப்பெற்றனவாகக் காணப் 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/58&oldid=900773" இலிருந்து மீள்விக்கப்பட்டது