பக்கம்:வானொலி வழியே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவடிச் சிந்து பெறினும் நமக்குக் கிடைப்பன மிகச் சிலவே, ஓரிரண் டளவே. துர்க்கைமுத்துப்புலவர் பாடிய பழகி தண்டாயுத பாணிக்குச் செலுத்தும் காவடிச் சிந்தும், சென்னிகுளம் அண்ணுமலே ரெட்டியார் கழுகுமலை முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லும் நிலையில் பாடிய காவடிச்சிந்தும் இன்று உள்ளன. இந்த அடிப்படையில் பின்பு இராமாயணச் சிந்து, பாரதச் சிந்து முதலியனவும் எழுந்தன. இவற்றுள் காட்டில் பலராலும் போற்றப் பெறுவதும் காவடிச்சிந்து இதுதான் எனக்காட்டி அதன் மரபை மங்காது வாழவைப் பதும் அண்ணுமலே ரெட்டியார் காவடிச்சிந்து ஒன்றுதான். தென்பாண்டி நாட்டில் கரிவலம் வந்த கல்லூருக்கு அடுத்த சென்னிகுளம் கிராமத்தில் சென்ற நூற்ருண்டில் (18611890) வாழ்ந்த இவ்வாசிரியர் சேற்றுார், ஊற்றுமலே முதலிய ஊர்களின் குறுகில மன்னர்களிடம் அவைக்களப் புலவராக இருந்தார் என அறிகிருேம். இவர் கழுகுமலை முருகனிடம் நீங்காத பற்றுக்கொண்டார் என்பது இவர் நூலால் அறியக்கிடக்கின்றது. இதில் இருபத்திரண்டு இசைப்பாடல்கள் உள்ளன. காவடிச்சிந்து வழியிடைப் பாடப்படுவது போன்ற ஒன்ருயினும் சிறந்த இலக்கியமாகக் கொள்ளவும் வழி யுண்டு. இது ஒரு அகப்பொருள் நூலாக அமைகின்றது. இறைவனக் காணச்செல்லும் தலைவி அவ்விறைவனது காடு, நகர், மலை, கோயில் இவற்றின் வளங்களையெல்லாம் பாடி அவனருளால் தன்னை மறந்து தன்னமம் கெட்டு அவன் தாள் தலைப்பட்டுச் செல்ல, அதை அறிந்த செவிலி, கற்ருய் போன்ருேர் இரங்கும் வகையில் அமைகின்றது முதற்பகுதி. பிற்பகுதியோ, பாங்கியைத் தலைவி தூதனுப் புதல், தலைவியின் வண்ணத்தையும் உருவ அமைப்பின் 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/59&oldid=900776" இலிருந்து மீள்விக்கப்பட்டது