பக்கம்:வானொலி வழியே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே அருமையையும் பாங்கி கூறல் போன்றவற்றையும் தலைவி யின் ஊடலையும் அதன் வழித் தோன்றும் வயாவினையும் வருத்தத்தினையும் விளக்குவதோடு, தலைவனின் பிரிய முடியாத வருத்தத்தையும் காட்டும் பகுதியாக உள்ளது. மேலும் தலைவனேக் கலந்த தலைவி தான் பெற்ற இன்பத்தை . பேச முடியாத இன்பத்தை-பாங்கிக்குப் பேசும் வகை யிலும் ஒரு பாட்டு உள்ளது. இவ்வாறு இக்காவடிச் சிந்து முழுக்க முழுக்க அகப்பொருள் நலம் சான்ற சிறந்த இலக் கியமாகத் திகழ்கின்றது என்பது பொருந்துவதாகும். பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும் மஞ்சாடும. மலைமுழக்கும் துஞ்சாக் கம்பலை (பரி 8, 109 - 111). முன்னுறை நிறைஅணி நின்றவர் மொழிமொழி ஒன்றல பலபல உடன்றெழுந்தன்று; அவை எல்லாம் தெரியக் கேட்டவர் யார்? (பரி 12 36 - 38) என்ற பரிபாடல் அடிகளை ஈண்டு எண்ண வேண்டும். இக்காவடிச்சிந்தில் அடிகளின் அமைப்பையும் அதன் வழி அமையும் சந்த இசையினையும் பொருள் வளத்தையும் அக்காவடி தாங்கும் தம்மை மறந்த அடியவர்தம் துஞ்சாக் கம்பலையினையும் முற்றும் அறிந்தவர் யாரே! இனி, நூல் வழியே சில காணலாம். பாடல்கள் சந்தச் செறிவுடையனவாக உள்ளன. பாடல்கள் தனித்தமிழ் கடையிலோ அன்றி உயர்ந்த அமைப்பிலோ இல்லையா யினும், எளிய வாழ்வில் திளைக்கும் எண்ணற்ற மக்களின் சிந்தையை இவை தொடும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு பாட்டிலும் ஆசிரியர் தம்மைப்பற்றிக் கூறிக்கொள்ளும் முறையும் அமைப்பாகவே உள்ளன. ஆசிரியர் மலேயையும் நகரையும் பாராட்டும்போது காம் அங்கேயே இருப்பது 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/60&oldid=900779" இலிருந்து மீள்விக்கப்பட்டது