பக்கம்:வானொலி வழியே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவடிச் சிந்து போன்ற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது. ஒவ்வொரு பாட்டும் இராகம், காலம் இவை பொருந்திய வகையில் அவற்ருேடே காட்டப் பெற்றுள்ளன. முடுக்குச் சந்தங்கள் தமிழை நன்கு பயின்ருர்க்கல்லது வாயில் நுழையாவகையில் இருந்தாலும், சொல்லும் போது உணர்ச்சி பிறக்கிறது. எனவே, அவற்றுள் சிலவற்றையாவது இங்கே நாம் கேட்டுத் தான் ஆகவேண்டும். இதோ ஒரு சில. (கழுகுமலைநகர் வளம் பற்றி அவர் பாடியவற்றுள் ஒரு சில-கேளுங்கள்.) : இப்பாடல்களுள் அங்ககளின் இயற்கைச் சூழல், செயற் கைத் திறன், தெருக்கள், அவற்றில் வாழ்வோர் கிலே, இல்லத்தே வாழும் மடவார் ஊடல் கூடல் நிலைகள், அகத்தி யரும் அஞ்சத்தக்க கற்ருர் சிறப்பு, பொது இடங்கள் இன்ன பிறவும் நன்கு காட்டப் பெற்றுள்ளன. இனி முருகன் தங்கும் அத்திருக்கோயிலின் அமைப்பும் மதிலின் உயர்வும் கொடிமரம் முதலியவற்றின் ஏற்றமும், வழிபடும் மக்கள் எடுப்பான தோற்றமும் வழிபாட்டு முறையும், திருப்புகழ் பாடப்பெறும் பண்பும் நன்கு கோயில் வளத்தில் கூறப்பெற்றுள்ளன. இதோ அவர் வாக்கு. ே அடுத்து வரும் அகப்பொருள் செறிந்த பாடல்களும் பாடற்கினியவை. தலைவன் தன்.தலைவியை நோக்கித் தன் உள்ளம் அவளேக் கூடாமையால் பெறும் வருத்தத்தைத் தெரிவிக்கும் பாடல் நயம் பொருந்தியதாகும். அப்படியே தலைவனிடம் தலைவி தான் பெற்ற இன்பத்தைப் பாங்கிக்குக் கூறுவதும் நயம் பொருந்தியதே. நீங்களே கேளுங்கள். *

  • இப்பாடல்களை வானெலி இசை வாணர்கள் பக்க வாத்தியங்களோடு இடையிடையே பாடிக் காட்டினர் . பாடல்கள் பின் இணைப்பில் உள்ளன.

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/61&oldid=900781" இலிருந்து மீள்விக்கப்பட்டது