பக்கம்:வானொலி வழியே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைவாழ் மக்கள் 22-3-1971 ஒரு நாட்டு நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, நகரச் சூழலில் பல்வேறு நாகரிக மக்களோடு பட்டுழல்பவரைக் காட்டிலும், எங்கோ மூலே முடுக்குகளில் வாழும் காட்டுப்புற மக்களே கட்டிக் காத்து வருகின்றனர். அவருள்ளும் எங்கோ காட்டு மூலைகளில்-மலைகளில் ஒதுங்கி வாழும் பண்டைப் பழங்குடிகளே உண்மையான அடிப்படைப் பண்புகளைப் போற்றிப் புரக்கின்றனர். ஆரவாரத்துக்கும் படாடோபத்திற்கும் பகட்டுக்கும் இடம் கொடாது, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற நோக்கோடு அமைதியாக வாழ்ந்து வரும் அந்த மக்கள் வாழ்வில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை பல. கொங்கு காட்டில் சிறப்பாகத் தருமபுரி மாவட்டத்தில் எத்தனையோ வகையான மக்கள் மலையிடங்களில் வாழ்ந்து வருகிருர்கள். எனினும் அவர்களுள் முக்கியமான ஒரு சிலரைப் பற்றிமட்டும் நான் இங்கே காட்டலாம் என எண்ணுகின்றேன். தருமபுரி மாவட்டத்தை எண்ணும் போது அங்கே ஆண்ட கொடை வள்ளல் அதிகமானும் அவனெடு வாழ்ந்த ஒளவையும் என் கண்முன் வருகின்றனர். அதிகமான் 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/63&oldid=900787" இலிருந்து மீள்விக்கப்பட்டது