பக்கம்:வானொலி வழியே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே கோட்டையும்', 'ஒளவை வழியும் அவர்கள் ஆய்ந்த "இலக்கியப்பட்டி'யும் இன்றும் ஊர்களின் பெயர்களாக இருப்பதறிந்து மகிழ்ந்தேன். அம்மாவட்டத்தில் - அதிலும் மலைவாழும் குடிமக்களிடத்தில் நல்ல தமிழ் வழக்குகள் இருப்பது அறிந்து மகிழ வேண்டியதே. தமிழ் நாட்டின் வட மேற்கு மூலை எனத்தகும் தருமபுரி மாவட்டத்தில் கன்னடமும் தெலுங்கும் சுற்றிக் காவல் புரியும் நிலையில், சில மலைத்தொடர்கள் உள்ளன. அம்மலே களில் ஆங்காங்கே சிற்றுார்கள் அமைத்துக் கொண்டும் ஊர்தோறும் உழன்று கொண்டும் பல மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றனர். அவருள் மஞ்சுமலேக் குறும்பரும் ஒக்கனக்கல் பஸ்தரும் மாரண்ட ஹள்ளி இருளரும் குடகரை சிவாசாரத்தாரும் முக்கியமானவர். குறும்பர் குறும்பர்கள் மஞ்சுமலைப் பகுதியில் வாழ்கின்றனர்நீலகிரியிலிருக்கும் குறும்பர் என்னும் ஒர் இனத்தவர் இவரினும் வேறுபட்டவர். மேகங்கள் சூழ்ந்த மலைக்கு இக் குறும்பர்கள் மஞ்சு மலை எனப்பெயரிட் டழைத்திருக் கிறனர். குறும்பு என்பது மலையிடைச் சிற்றுார். அதில் வாழ்பவர் குறும்பர் ஆவர். எனவே இவர்தம் பெயரும் வாழிடமும் இவர்கள் பெயரிடும் தமிழ் மரபை நன்கு, காட்டுவன. இவர்கள் சில மலைவாழ் மக்களைப் போலன்றி. சற்றே செல்வமும் செல்வாக்கும் பெற்றே வாழ்கின்றனர். தத்தமக்கென வீடுகளும் கிலபுலங்களும் உள்ளன. ஆடுகள் அதிகமாக வைத்துக்கொண்டு, அதன்வழிக் கம்பளம் எடுத்தும், ஊருக்கு மங்தை கட்டியும் பொருள் பெறு கின்றனர். கம்பளம் கழிப்பதை அறுவடை எனவே 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/64&oldid=900789" இலிருந்து மீள்விக்கப்பட்டது