பக்கம்:வானொலி வழியே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைவாழ் மக்கள் கூறுவர். ஆம்! இவர்கள் வாழ்வுக்குரிய வளம் வழங்கும் அறுவடை அதுதானே. இவர்கள் பல்வேறு அடிப்படை. களில் ஆடுகளுக்குப் பெயரிட்டு வழங்குகின்றனர். சில ஆடுகள் தம் எசமான"ருடன் கூடிக் குலாவும் காட்சி கண்டு: மகிழத்தக்கதாகும். மஞ்சுமலைக் குறும்பர்தம் பெயர்கள் பலவகைப்பட்டன. ஆடவர் சித்தன், பீரன், தாதன், மாறன், மாதன், எழுபடையாண்டி, சம்பன் எனவும், மகளிர் சித்தி, பீரி, தாதி, மாதி, மாரி, சம்பி எனவும் அழைக்கப்பெறுகின்றனர், இவ்விருவகைப் பெயர்களும் ஒன்ருேடொன்று இணங். திருப்பது போன்றே இவர்தம் இல்லறவாழ்வும் இணைந்து காணப்படுகின்றது. இவர்கள் படி எடுத்தல் என்னும் முறையில் கோயில் வழிபாட்டிற்கு வசூல் செய்கின்றனர். செய்து ஆண்டு. தோறும் விழா எடுப்பர். இவ்விழா மேலே கண்ட அறு. வடை'யை ஒட்டி மாரியம்மன் விழாவாக நடைபெறும். இதில் விளக்கெடுத்தல் என்ற சிறப்பும் உண்டு. இது. பெரியபாளையத்தில் 'மண்டை விளக்கு எடுப்பது போன்றது. இதில் தட்டப்பா என்ற மூங்கில் சறுக்கு விழா இடம் பெறும். தட்டப்பா என்பது மூங்கிலுக்குப் பெயர். இவரது வழிபடு தெய்வம் ஆகிய வீரபத்திரருக்கு, எப்போது அத்தெய்வம் வேண்டுகிறதோ அப்போதுதான் விழா எடுப்பர். தெய்வம் மனிதன் மேல் ஆரோகணித்து விழாக் கொண்டாடப் பணிக்குமாம். இவ்விழா மூண்ருண்டு களுக்கு ஒரு முறை நடைபெறும் போலும். இவ்விழா ஆற்றும் பூசாரி விழா நாட்களில் மிக எச்சரிக்கையாக விரதங்களை மேற்கொள்ள வேண்டும். தவறின் நாட்டுக்கே அழிவு என நம்புகின்றனர். இவ்விழாவில் அலகு குத்திக் 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/65&oldid=900791" இலிருந்து மீள்விக்கப்பட்டது