பக்கம்:வானொலி வழியே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே கொள்ளும் வழக்கமும் உண்டு. வீடுதோறும் தனிப்பட்ட 'கும்பிடு, வேண்டுதல் முதலிய விரதங்களும் விழாக்களும் உள்ளன. விழாவில் மட்டுமின்றிச் சாதாரண வாழ்விலும் இவர்கள் கட்டுப்பாடான சடங்குகளை உடையவர்கள். குழந்தை பிறந்தால் எட்டு நாள் தீட்டு என்பர். குரு வங்தே சடங்கு வழித் தீட்டுக் கழிக்க வேண்டும். மணத்திற்குப் பெண் உறுதி செய்யும் விருந்தினைப் பெண் சோறு எனவே அழைக்கின்றனர். தாலி உண்டு. அதில் வீரபத்திரர் உருவம் செதுக்கி இருக்க வேண்டும், பாலிகை முதலியவையும் உள. மணத்தில் இவர்கள் பாடுகின்ற பாடல்கள் பொருள் பொதிந்தவை. வயது வந்த பெண்களை ஊருக்கு வெளியில் தாய்மாமன் கட்டும் தனிக் குடிலில் இருக்கவைப்பர். எட்டு நாள் கழித் .துத் தீட்டுக் கழிந்த பிறகே பெண் வீட்டுள் புகலாம். மகளிர் கருவுற்ருல் வளைகாப்பு உண்டு. மணம் புரிந்தவர் விரும்பினல் பஞ்சாயத்தார் முன். நூறு ரூபாய் தந்து ஒருவரை ஒருவர் கழித்துக் கட்டிக் கொள்ளலாம். குழந்தை இருப்பின் அதனைக் கணவனே ஏற்றுக்கொள்ளவேண்டும். பிறகு அவர்கள் வேண்டுமாயின் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனல் மணம் செய்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு பல வகையில் தங்களுக்கெனப் பல சட்டதிட்டங் களே வகுத்துக்கொண்டு இக்குறும்பர் அமைதியாக-மன கிறைவோடு மஞ்சு மலேயைச் சார்ந்து வாழ்கின்றனர். அவர் வாழ்வு வளமுறுவதாக! இருளர் அடுத்து மாரண்ட ஹள்ளியை ஒட்டி நாடோடி’ எனவே வாழும் இருளர்களைப் பற்றிச் சில காண்போம். 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/66&oldid=900793" இலிருந்து மீள்விக்கப்பட்டது