பக்கம்:வானொலி வழியே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைவாழ் மக்கள் உதகையில் வாழும் இருளர்கள் வளமுற்றே வாழ்கிருர்கள். ஆனல் இங்கே உள்ளவர்களோ அன்ருட உணவிற்கும் அல்லலுற்றவர்களாகவே உள்ளனர். இவர்கள் பெயரும் வாழிடமும் கூட ஊர்க்கணக்கில் இல்லை என்கின்றனர். கவிபுரம், குசையூர் என இவர்கள் வாழிடங்களைக் கூறுகின் றனர். காட்டில் விலங்கோடு விலங்காகச் சுற்றித் திரியும் இவர்கட்குப் பெயருக்கெனக் குடிசைகள் உள்ளன. சொந்த ஊர் இல்லையாயினும் சாதிக்கட்டுப்பாடு இவர்களுக்கு உண்டு. இவர் வரையறுத்த சிலர் ஊர் எல்லேகளை விட்டுத் தாண்டக்கூடாதாம். இவ்வாறு சேர்ந்த பகுதி களைச் செடி என்கின்றனர். செடி என்ருல் பிரிவு' என்று பொருளாம். இவர்தம் தலைவர் சாதிக் கவுண்டர் எனப்படுவர். ஊரார் மாடு மேய்ப்பது, விறகு வெட்டி விற்பது, தேன் எடுப்பது போன்றவை இவர்தம் தொழில் கள். அரக்கெடுத்தல் இவர்தம் முக்கியத் தொழிலா கின்றது. இவர்கள் மருந்தகத்தையே காடமாட்டார்களாம். எல் லாம் கை வைத்தியமே. மகப்பேறுற்ருலும் மருந்தகம் நாடா தவர்கள்; ஒய்வும் பெருதவர்கள். இவர்கள் நாடோடிகள் போலிருப்பினும் வாழ்வைச் சுமையாகக் கருதாது மனநிறை. வோடு வாழ்கிருர்கள். இவர்கள் மணம் எல்லோருக்கும் சொல்லியே நடை பெறும். சிறிய இலேப்பக்தலே மணவிடம். பிள்ளையார் பிடித்து வைப்பர். கல்கட்டுப் புங்கம் தழை கட்டுவர். பச்சைக் கால்களே நடுவர். பால் உள்ள செடிகளாகப் பார்த்து வலம் வந்து தம் வாழ்வு பெருக வேண்டும் என வேண்டுவர். இறப்பை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/67&oldid=900794" இலிருந்து மீள்விக்கப்பட்டது