பக்கம்:வானொலி வழியே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே எல்லாருக்கும் சொல்வதுகூட இல்லையாம். முதல்நாள் -சுடுங் சடங்கன்றிப் பிறகு வேறு சடங்கு கிடையாது. இவர்கள் தெய்வ சிந்தனே உடையவர்கள். காய்ச்சல் வந்தால் கல் கட்டு வணங்குவர். பச்சிலேயே மருந்து. அம் மைக்கு அஞ்சுவர். யாருக்காயினும் அம்மை வந்தால் மனைவி மக்கள் உட்பட அனைவரும் அவரைத் தனியாக்கி ஊரை விட்டே ஓடிவிடுவர். பிழைத்தால் புண்ணியந்தான். இன்றேல் கவலையில்லை. சுமார் முந்நூறு குடும்பங்களே உள்ள இவ்விருளர் வாழ்வு இருண்டதாயினும் மனம் தெளிந்ததாகக் காண்கிறது. அவர் உள்ளம் வாழ்வதாக!

பஸ்தர்

ஒக்கனகல்லில் வாழும் பஸ்தர் மீன் பிடிப்பவர்கள். இவர்கள் வாழ்வு மலையிலே அமைந்த போதிலும் வருவாயை .நீரில் இருந்தே தேடுகின்றனர். மலைத்தொழில்களாகிய தேன் எடுத்தல் - விறகு வெட்டல் முதலிய தொழில்களன்றி, இவர்கள் பெரும்பாலும் மீன் பிடித்தே வாழ்கின்றனர். ஒக்கனகல் வீழ்ச்சிக்குப் பிறகு காவிரி அமைந்து செல்லும் பரப்பிலும் இவர்கள் மீன் பிடிக்கின்றனர். இவர்கள் வாழும் இடத்தையும் காவிரி புரம் என்றே அழைக்கின்றனர். இவர்கள் ஊட்டமலே, கோட்டையூர், பண்ணவாடி ஆகிய ஊர்களில் அதிகமாக வாழ்கின்றனர். இரவு உணவுக்குப் பின் ஆடவர் மீன் பிடிக்கத் தொடங்குகின்றனர். நல்ல அறுவடையுடன் காலையில் விடு திரும்புவர். பெண்கள் அவற்றைக் கரையிலும் ஊர். களிலும் விற்கின்றனர். நீர்த்துறையை இவர்கள் ரேவுத் துறை என்கின்றனர். மீன் பிடித்தலை வேட்டை என் 66.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/68&oldid=900795" இலிருந்து மீள்விக்கப்பட்டது